தமிழ்நாடு

“மிசா - சிறையில் நான் பட்ட கொடுமைகள்” : #VibeWithMKS - நினைவுகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

VIBE WITH MKS நிகழ்ச்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.

“மிசா - சிறையில் நான் பட்ட கொடுமைகள்” : #VibeWithMKS - நினைவுகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்நிலையில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் மிசா காலத்தில் சிறையில் தாம் அனுபவித்த கொடுமைகள் குறித்து VIBE WITH MKS நிகழ்ச்சியில் பகீர்ந்து கொண்டார். அதேபோல் நம்பி நாராயணனும் தனது வாழ்க்கை அனுபவங்களை முதலமைச்சரிடம் பகீர்ந்து கொண்டார்.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1971-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட விதம் குறித்து முதலமைச்சர் நினைவுக்கூர்ந்தார்.

நாடகத்தில் நடிக்கச் சென்றிருந்த சமயத்தில் மிசா சட்டத்தில் கைது செய்ய காவல்துறை வீட்டிற்கு வந்ததையும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தம்மை சிறைக்குச் செல்லும்படி அறிவுறுத்தியதையும் முதலமைச்சர் விளக்கினார்.

சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் ஓராண்டு காலம் அனுபவித்த கொடுமைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார். சிறையில் முத்தமிழறிஞர் கலைஞர் தம்மை சந்திக்க வந்தபோது, உடலில் ஏற்பட்ட காயங்களை மறைக்க முழுக்கைச் சட்டை அணிந்திருந்ததாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதேபோல், நம்பி நாராயணன் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சு தன்னை மிகவும் கவர்ந்ததாக விஞ்ஞானி நம்பி நாராயணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறினார்.

தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும், பேரறிஞர் அண்ணா புலமை மிக்கவராக திகழ்ந்ததையும், தலைவர் கலைஞர் தம்முடைய பேச்சு மற்றும் எழுத்தால் பேராளுமையாக விளங்கியதையும் விஞ்ஞானி நம்பி நாராயணன் முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டார். மேலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories