
பீகார் மாநிலத்தின் அலிநகர் தொகுதியில் இருந்து பா.ஜ.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரபல நாட்டுப்புறப் பாடகி மைத்லி தாக்கூர். பீகார் சட்டப்பேரவை விவாதத்தில் கலந்து கொண்ட அவர், அரசு மருத்துவமனைகளின் அவல நிலை குறித்து காரசாரமாகக் கேள்விகளை எழுப்பினார்.
அலிநகர் அரசு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் மழைக் காலங்களில் தண்ணீர் கசிந்து நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தான சூழல் நிலவுகிறது என்றும் அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிரமோத் சந்திரவன்ஷி, விரைவில் 12 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
ஆனால், அமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை’ எனக் கூறிய மைத்லி தாக்கூர், பல ஆண்டுகளாகச் சீரமைப்புப் பட்டியலில் இந்த மருத்துவமனை இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றம் குற்றம்சாட்டினார்.
ஆளும் கூட்டணியைச் சேர்ந்த பாஜக பெண் எம்எல்ஏ ஒருவர் அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.






