தமிழ்நாடு

“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் "உலக மாற்றுத்திறனாளிகள் தினம் - 2025" மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழா நடைபெற்றது.

“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற "உலக மாற்றுத்திறனாளிகள் தினம் - 2025" மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு  என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். முதலில் இங்கு வருகை தந்திருக்கக்கூடிய அனைத்து மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய மாற்றுத்திறனாளி நாள் நல்வாழ்த்துகளை நான் முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் சட்டமன்ற உறுப்பினராக முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டு, சட்டமன்றத்தில் என்னுடைய கன்னிப்பேச்சு என்று சொல்வார்கள், முதல் பேச்சில் முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தேன்.

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனப் பதவியை வழங்க வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை. இன்றைக்கு அந்த கோரிக்கைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஒரு வடிவம் தந்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றியும் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த கோரிக்கை மட்டுமல்ல, அதனுடன் சேர்த்து இன்னொரு கோரிக்கையும் வைத்தேன். மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திற்கு தனியாக ஆணையரை நியமிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்திருந்தேன். அதையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு நிறைவேற்றி கொடுத்திருக்கிறார்கள்.

“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!

ஆகவே, எப்போதுமே நம்முடைய மாற்றுத்திறனாளிகளுடைய கோரிக்கைகளை  நிறைவேற்றுபவராக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை அறிமுகம் செய்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

அதுமட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்ற ஒரு தனித்துறையை உருவாக்கி அது எப்போதுமே முதலமைச்சருடைய நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டவர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதை செயல்படுத்தியவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்து எப்போதுமே சிந்தித்து செயல்பட்டவர்தான் டாக்டர் கலைஞர் அவர்கள். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்தை மாற்றுத்திறனாளிகளை வைத்துதான் கலைஞர் அவர்கள் முதன் முதலில் வெளியிட்டார்.

அந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமையேற்றிருந்தவர் தமிழ்நாடு  விழி இழந்தோர் சங்கத் தலைவர் ஆசீர். நல்லதம்பி அவர்கள்.  நூலை வெளியிட்டவர் தொழுநோயாளிகள் மறுவாழ்வு சங்க பொதுச் செயலாளர் கவிஞர் முகமது அலி அவர்கள், முதல் நூலை பெற்றுக் கொண்டவர் மாற்றுத்திறனாளி பெண் சாந்தகுமாரி அவர்கள். 

இன்றைக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு நிறையபேர் மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக பேசலாம். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பே முழுக்க, முழுக்க மாற்றுத் திறனாளிகளினுடைய நலனை சிந்தித்து அந்த நூலை வெளியிட்டவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

அந்த வகையில்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்களும் இன்றைக்கு செயல்பட்டு வருகிறார்கள். முந்தைய 10 ஆண்டுகால ஆட்சியில் இதே வள்ளுவர் கோட்டம் எந்தவித பராமரிப்புமின்றி இருந்தது உங்கள் அத்தனைபேருக்கும் தெரியும்.

நம்முடைய ஆட்சி அமைந்தபிறகு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள்தான் இந்த வள்ளுவர் கோட்டத்தை புனரமைப்பு செய்தார்கள். அப்படி புதுப்பிக்கப்பட்ட இந்த வள்ளுவர் கோட்டத்தில் நடந்த முதல் நிகழ்ச்சியே நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள்  நடத்திய ஒரு பாராட்டு விழாதான். 

நாங்கள் சென்ற மாதம் இதே வள்ளுவர் கோட்டத்தில் அறிவுத் திருவிழாவை நடத்தினோம். இன்றைக்கு நம்முடைய அரசு உங்களுக்கு அன்பு திருவிழாவை, பாசத் திருவிழாவை இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறது.

உலகத்திலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக  உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் மக்கள் பிரதிநிதிகளாக இன்றைக்கு நியமிக்கப்பட இருக்கின்றீர்கள். உங்களுடைய கோரிக்கைகளை, உங்களுடைய தேவைகளை நீங்கள் மற்றவர்கள் மூலமாக இனிமேல் கேட்கவேண்டிய அவசியம் இல்லை.

ஒவ்வொரு உள்ளாட்சி கூட்டங்களிலும், நீங்களே உங்களுடைய கோரிக்கையை, உங்களுடைய குரலை நீங்கள் எழுப்பி, உங்களுடைய தேவைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். மற்றவர்கள் உங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய அந்த காலம் போய் நீங்கள் மற்றவர்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய காலம் இன்றைக்கு வந்திருக்கின்றது. அதை ஏற்படுத்தி கொடுத்தவர், அந்த சாதனையை நிகழ்த்தி காட்டிய பெருமைக்குரியவர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வகையிலும் சிந்தித்து செயல்படக்கூடிய அரசாக, நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மெரினா பீச்சாக இருக்கட்டும், பெசன்ட் நகர் பீச் அங்கெல்லாம் மாற்றுத் திறனாளிகள் கடல் அலையை ரசிப்பதற்காக சிறப்பு பாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

அதே போல விளையாட்டுத் துறையை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், மாற்றுத்திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை பல்வேறு வகையிலும் இந்த அரசு ஊக்கப்படுத்தி வருகின்றது. பல்வேறு மாவட்டங்களிலும் Para Sports Arena என்ற மாற்றுத்திறனாளிகளுக்ககான பிரத்யேக விளையாட்டு அரங்கங்களையும் அமைத்துக் கொடுத்திருக்கின்றோம். இன்றைக்கு தமிழ்நாடு மாற்றுத் திறன் விளையாட்டு வீரர்கள்  விளையாட்டில் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறார்கள்.

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக மாற்றுத் திறன் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து நிதி உதவியும், ஊக்கத் தொகையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகின்றார். அதன் விளைவாக மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்கள் இன்றைக்கு சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை குவித்து சாதனை படைத்து நம்முடைய தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடி தந்து கொண்டிருக்கிறீர்கள்.

அப்படி சாதனை படைத்த 5 மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கு முதன்முறையாக நம்முடைய மாநிலத்தில்  3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீட்டீன் கீழ் அரசுப்பணியை நம்முடைய திராவிட மாடல் அரசு, முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

இந்த முறை முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு ஒரு இலக்கு கொடுத்திருக்கிறார். சென்ற வருடம் 5 மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தோம். இந்த ஆண்டு 25 மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இப்படி எல்லா வகையிலும் மாற்றுத் திறனாளிகளுடைய நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர் அவர்களுக்கு நீங்கள் அனைவரும் எப்போதுமே பக்கபலமாக இருக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் அன்போடு உரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன்.

banner

Related Stories

Related Stories