தமிழ்நாடு

ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!

ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு எல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது.

ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

”ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு எல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது. எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள். எங்களுடன் இருப்பவர்கள் நண்பர்கள்" என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி ”பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. இவர்களின் மாயாஜால வித்தை எல்லாம் இங்கு எடுபடாது.

ஆளுநர் பதவி எல்லாம் எதிர்ப்பார்த்து காத்திருந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் நானும் பா.ஜ.கவில்தான் இருக்கிறேன் என தனது இருப்பை காட்டிக் கொண்டு இருக்கிறார். த.வெ.கவில் இணைந்துள்ள செங்கோட்டையன் பா.ஜ.கவின் ஸ்லீப்பர் செல்.

ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு எல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது. எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள். எங்களுடன் இருப்பவர்கள் நண்பர்கள்" என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

நான் தி.மு.கவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பழைய பல்லவியையே ஜெயக்குமார் பாடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு புதிய ராகம் கிடைக்கவில்லைபோல. ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும்.பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories