தமிழ்நாடு

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அவை என்ன?

கீழக்கரை வட்டத்தில் இருக்கின்ற உத்திரகோசமங்கை, வித்தானூர் உள்ளிட்ட 6 கண்மாய்கள் 4 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்படும்.

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அவை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், இம்மாவட்ட மக்கள் பயன்படும் வகையில், 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

முதலாவது அறிவிப்பு: –

இராமநாதபுரம் நகராட்சியில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதி நான்குவழித் தடத்திலிருந்து ஆறுவழித் தடமாக 30 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

இரண்டாவது அறிவிப்பு : –

திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டங்களில் இருக்கின்ற 16 முக்கிய கண்மாய்கள் 18 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

மூன்றாவது அறிவிப்பு : –

கீழக்கரை வட்டத்தில் இருக்கின்ற உத்திரகோசமங்கை, வித்தானூர் உள்ளிட்ட 6 கண்மாய்கள் 4 கோடியே 65 இலட்சம் ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்படும்.

நான்காவது அறிவிப்பு : –

கடலாடி வட்டத்திலுள்ள செல்வானூர் கண்மாய் 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சிக்கல் கண்மாய்கள் 2 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மறுசீரமைக்கப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு : –

பரமக்குடி நகராட்சிக்கு 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும்.

ஆறாவது அறிவிப்பு : –

இராமநாதபுரம் நகராட்சியின் பழைய பேருந்து நிலையம் நவீன வணிக வளாகமாக மாற்றி அமைக்கப்படும்.

ஏழாவது அறிவிப்பு : –

இராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் வசதிகளை மேம்படுத்தி, புதிய பாடப் பிரிவுகளை தொடங்கும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் புதிய - கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும்.

எட்டாவது அறிவிப்பு : –

கீழக்கரை நகராட்சிக்கு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அலுவலகக் கட்டடமும், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன மீன் அங்காடியும் கட்டப்படும்.

ஒன்பதாவது அறிவிப்பு : –

கமுதி பகுதி விவசாயிகளின் நலன்கருதி, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

banner

Related Stories

Related Stories