தமிழ்நாடு

தீவிரமாக நடைபெற்று வரும் பணிகள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு எப்போது? - அமைச்சர் சேகர்பாபு!

திமுகவையும், திராவிட மாடல் அரசையும் விமர்சிப்பவர்களின் கனவு, 2026 ஆம் ஆண்டு பொய்த்து போகும் என்று அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார்.

தீவிரமாக நடைபெற்று வரும் பணிகள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு எப்போது? - அமைச்சர் சேகர்பாபு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பிராட்வே ஜீல்ஸ் சாலை மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்தில் 214 ஆவது நாளாக நடைபெற்ற அன்னம் தரும் அமுதக் கரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர் பாபு காலை உணவு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி அன்னம் தரும் அமுகக்கரங்கள் நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு காலை உணவுகளை வழங்கி வருகிறோம். 214 ஆவது நாளாக அன்னம் தரும் அமுகக்கரங்கள் நிகழ்ச்சி மூலம் 428 இடங்களில் உணவுகளை வழங்கி வருகிறோம்.

தீவிரமாக நடைபெற்று வரும் பணிகள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு எப்போது? - அமைச்சர் சேகர்பாபு!

=> கேரளாவில் நேற்று (செப்.20) திருவிதாங்கூர் தேவஸ்தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு என்ன கோரிக்கை வைக்கப்பட்டது என்ற கேள்விக்கு...

“தமிழ்நாடு எல்லை பகுதியில் உள்ள கண்ணகி கோயிலுக்கு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் அங்கு கட்டிடம் கட்டுவதற்கான பணிகளையும் கோயிலுக்கான வழிபாதை செய்து தரும்படி கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு மார்கழி மாதத்தில் தமிழகத்தில் இருந்து தான் அதிக பக்தர்கள் செல்கிறார்கள். எனவே அங்கு ஐயப்ப பக்தர்கள் தங்குவதற்கான கட்டிட பணிகள் நடைபெறும் என கூறி உள்ளனர். அதே போல பழனியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் கோயில் பணிகள் மேற்கொள்ள அவர்கள் இடம் கேட்டுள்ளனர். அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக கேரள முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கேரள ஐயப்பன் கோயில்களில் மண்டல மற்றும் மகர பூஜைகாலங்களில் வரும் தமிழக பக்தர்களுக்காக மருத்துவ வசதிக்காக கன்னியாகுமாரி தேவஸ்தானத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உள்ளனர். அவர்களுக்கு அறை உணவு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொண்டேன்” என்று தெரிவித்தார்.

தீவிரமாக நடைபெற்று வரும் பணிகள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு எப்போது? - அமைச்சர் சேகர்பாபு!

=> திமுகவை விஜய் விமர்சனம் செய்தது குறித்தான கேள்விக்கு...

“விஜய்க்கு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உரிய பதில் அளித்துள்ளார். அதுவே போதுமானது. அதனால் அதை பற்றி பேச வேண்டாம்.” என்று தெரிவித்தார்.

=> மதுரை மீனாட்சி குடமுழுக்கு பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்ற கேள்விக்கு...

“மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு பணிகள் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஜனவரி மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்தி முடிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நிச்சயம் நடக்கும். திமுக ஆட்சியில்தான் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்திற்குள் மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நடத்தப்படும்.” என்று தெரிவித்தார்.

=> புதிதாக கட்சி தொடங்கிய தவெக மற்றும் அதிமுக, பாஜக, பாமக என அனைத்து கட்சிகளும் திமுக மீது கடும் விமர்சனம் வைப்பது குறித்த என்ற கேள்விக்கு...

“'காய்ச்ச மரத்தில் தான் கல்லடிப்படும்' என்று சொல்வார்கள். அதனால் மற்ற அரசியல் கட்சிகள் விமர்சிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அனைவரும் பார்த்து நடுங்குகின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. திமுகவையும், திராவிட மாடல் அரசையும் விமர்சிப்பவர்களின் கனவு, 2026 ஆம் ஆண்டு பொய்த்து போகும்.” என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories