அரசியல்

பாஜக, அதிமுகவுடன் போட்டியிடும் தவெக.. நாகை பிரச்சாரத்தில் மட்டும் இத்தனை பொய்களா? - அம்பலப்பட்ட விஜய்!

நாகை பிரச்சாரத்தில் விஜய் சொன்ன பொய்கள் அம்பலமாகியுள்ளது.

பாஜக, அதிமுகவுடன் போட்டியிடும் தவெக.. நாகை பிரச்சாரத்தில் மட்டும் இத்தனை பொய்களா? - அம்பலப்பட்ட விஜய்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் திமுக அரசு மீதும், திமுக மீதும் போலியான குற்றச்சாட்டுகள் வைப்பதில் முதன்மை இடத்தில் பாஜக இருக்கிறது என்றால், அண்மை காலமாக அந்த இடத்தை பிடிப்பதற்கு அதிமுக கடும் போட்டிபோட்டு கொண்டு பொய் பிரசாரம் செய்தது. ஆனால் தற்போது அதிமுக, பாஜக இரண்டுக்கும் Tough கொடுக்கும் விதமாக விஜய் தலைமையிலான தவெக களமிறங்கியுள்ளது.

புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், ஆர்மபித்தால் வெள்ளம் ஏற்பட்டபோது கூட களத்தில் இறங்காமல், பாதிக்கப்பட்டவர்களில் 20-30 பேரை வீட்டுக்கு அழைத்து நலத்திட்ட உதவிகள் செய்தார். அதன்பிறகும் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டபோதும் களத்தில் இறங்கி போராடாமல் Work From Politics செய்து கொண்டிருந்தார்.

பாஜக, அதிமுகவுடன் போட்டியிடும் தவெக.. நாகை பிரச்சாரத்தில் மட்டும் இத்தனை பொய்களா? - அம்பலப்பட்ட விஜய்!

இதற்கு மக்கள் மத்தியிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இப்படியான சூழலில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது தனது ரசிகர்கள் மத்தியில் பிரசாரம் செய்வதாக களத்தில் இறங்கியுள்ளார் விஜய். அந்த வகையில் கடந்த செப் 13-ம் தேதி (சனிக்கிழமை) திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது விஜயின் ரசிகர்கள் பொது சொத்துகளுக்கு மட்டுமின்றி தனியார் சொத்துகளுக்கும் சேதம் விளைவித்தனர். மேலும் ரசிகர்களை பல மணி நேரம் காக்கவைத்து பெரம்பலூர் செல்லாமல் சென்னை திரும்பியதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்த சூழலில் நேற்று (செப்.21, சனிக்கிழமை) நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்ட விஜய், திமுக அரசு மீது பல்வேறு போலியான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அவை தற்போது அம்பலமாகியுள்ளது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

அந்த பட்டியல் பின்வருமாறு :

=> நாகப்பட்டினத்தில் கடல்சார் கல்லூரி ஏதும் இல்லை. - விஜய்.

உண்மை : நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

பாஜக, அதிமுகவுடன் போட்டியிடும் தவெக.. நாகை பிரச்சாரத்தில் மட்டும் இத்தனை பொய்களா? - அம்பலப்பட்ட விஜய்!

=> மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. - விஜய்.

உண்மை : தமிழ்நாடு அரசின் முயற்சியால் கடந்த 2021 ஆம் ஆண்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்த அலையாத்திக் காடுகள் இன்று 90‌ சதுர கிலோமீட்டராக பெருகியுள்ளது.

பாஜக, அதிமுகவுடன் போட்டியிடும் தவெக.. நாகை பிரச்சாரத்தில் மட்டும் இத்தனை பொய்களா? - அம்பலப்பட்ட விஜய்!

=> பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாட்டுக்கு வரும்போது நிபந்தனைகளைப் போடுவீர்களா? - விஜய்.

உண்மை : சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற்ற பிரதமர் மோடியின் பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது.

பாஜக, அதிமுகவுடன் போட்டியிடும் தவெக.. நாகை பிரச்சாரத்தில் மட்டும் இத்தனை பொய்களா? - அம்பலப்பட்ட விஜய்!

=> நாகூர் மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர் இல்லை - விஜய்

உண்மை : ”நாகூர் மருத்துவமனையை நேரடியாக சென்று பார்க்காமல், யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே படித்திருக்கிறார் விஜய். நாகூர் மருத்துவமனைக்கு இன்றே நேரடியாக சென்று பார்த்தால் உண்மை என்னவென்று தெரியும். நாகூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் உள்ளிட்ட அனைத்து அதிநவீன மருத்துவ கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி !

பாஜக, அதிமுகவுடன் போட்டியிடும் தவெக.. நாகை பிரச்சாரத்தில் மட்டும் இத்தனை பொய்களா? - அம்பலப்பட்ட விஜய்!

=> பிரச்சாரத்தில் தமிழ்நாடு அரசு power cut பன்னுராங்க - விஜய்

உண்மை : விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என நாகை மாவட்ட தவெக மாவட்ட செயலாளர் அளித்த மனுவின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories