தமிழ்நாடு

வாழைப்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை என்ன? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய திமுக MPக்கள்!

வாழைப்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை என்ன? என மக்களவையில் திமுக எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாழைப்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை என்ன? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய திமுக MPக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வாழைப்பழ ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் மாநில அரசுகளுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு உதவிகள் வழங்குகிறதா என்று திமுக மக்களவை உறுப்பினர்கள் செல்வம் மற்றும் சி என் அண்ணாதுரை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், ”கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்ட திட்டங்கள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், உள்கட்டமைப்பு ஆதரவு அல்லது ஏற்றுமதி மானியங்கள் உள்ளிட்ட விவரங்கள் என்ன? கடந்த மூன்று ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் ஆண்டுதோறும் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணியுடன், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட வாழைப்பழங்களின் அளவு என்ன?

இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வாழைப்பழ ஏற்றுமதியை அதிகரிப்பதில் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என்ன? தமிழ்நாட்டிலிருந்து வாழைப்பழ ஏற்றுமதியை ஊக்குவிக்க வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஏதேனும் குறிப்பிட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதா;

அப்படியானால், கிளஸ்டர் மேம்பாடு, ஏற்றுமதி சார்ந்த பயிற்சி மற்றும் வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்ட விவரங்கள் என்ன? தமிழ்நாட்டிலிருந்து வாழை ஏற்றுமதியை ஆதரிக்க வாழை விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு ஏதேனும் நிதி உதவி அல்லது ஊக்கத்தொகை வழங்கப்படுகிறதா, அப்படியானால், அதன் விவரங்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories