செயற்கை நுண்ணறிவு (AI), வேளாண்மையில் துல்லிய தொழிநுட்பம், ட்ரோன் தொழில்நுட்பம், காலநிலைக்கேற்ப மாறும் திறன் மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற விவசாயத்தில் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வட சென்னை திமுக மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடித் திட்டங்கள் அல்லது முயற்சிகளின் விவரங்கள் என்ன? விவசாயிகள், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் இந்த தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதற்கு அரசாங்கம் அளிக்கும் நிதி ஊக்கத்தொகை, தொழில்நுட்ப ஆதரவு அல்லது பயிற்சித் திட்டங்களை என்ன?
2019ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் வேளாண்மை இயக்கம், வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் (SMAM) மற்றும் கிருஷி இயந்திர மானியத் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட மொத்த நிதி என்ன?
தொழில்நுட்பம் சார்ந்த விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்க ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் அல்லது தமிழ்நாடு மாநில அரசுடன் ஒன்றிய அரசு இணைந்து செய்யும் நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.