தமிழ்நாடு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் குறித்த முழு விவரம் உள்ளே..

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.07.2025 அன்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முகாமினை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார்கள். இந்தத் திட்ட முகாம்கள் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் 15.07.2025 அன்று முதல் அக்டோபர் மாதம் வரை மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள ஒவ்வொரு வார்டிலும் 2 வீதம் மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் 400 முகாம்கள் நடைபெறுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை 109 “உங்களுடன் ஸ்டாலின் " திட்ட முகாம்கள் இணைப்பில் கண்டுள்ள விவரப்படி நடைபெறுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 6 வார்டுகள் வீதம் “உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

ஒவ்வொரு வார்டிலும் முகாம் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளடக்கிய விண்ணப்பப் படிவங்கள் மற்றும் 13 அரசுத்துறைகள் மூலம் வழங்கப்படவுள்ள 43 சேவைகள் குறித்த முழு விவரங்கள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்த தகவல் கையேடு வழங்கப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் தங்களது வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் நேரடியாகச் சென்று தங்கள் விண்ணப்பத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.

இம்முகாம்களில் பெறப்படும் மக்களின் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.

“உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெறும் நாட்களில், முகாம் நடைபெறும் வார்டுகளில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!

=> 15.07,2025 அன்று 7 வார்டுகளில் நடைபெறவுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களின் விவரங்கள் :-

மாதவரம் மண்டலம், வார்டு-25ல் மாதவரம் தபால நிலைய சாலையில் உள்ள எம்.ஆர்.பேலஸ், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-38ல் பட்டேல் நகரில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-76ல், ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் உள்ள திரு.வி.க.நகர் மண்டல அலுவலக வளாகம், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-109ல் மத்திய பள்ளி சாலையில் உள்ள கில் நகர் விளையாட்டுத்திடல், வார்டு-14ல் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீமகாவீர் ஜெயின் பவன், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-143ல் அம்பத்தூர் இன்டஸ்ரியல் எஸ்டேட், வேலம்மாள் அரங்கம், அடையாறு மண்டலம், வார்டு-168ல் வி.ஜி.பி. சாலையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரி ஆகிய 7 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

=> 16.07.2025 அன்று 6 வார்டுகளில் நடைபெறவுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களின் விவரங்கள் :-

திருவொற்றியூர் மண்டலம், வார்டு-1ல் கே.எச்.சாலை, காமராஜ் நகர் சமூக நலக் கூடம், மணலி மண்டலம், வார்டு-20ல் காமராஜர் சாலை மணலி மண்டல அலுவலகம், அம்பத்தூர் மண்டலம், வார்டு-79ல் விஜயலட்சுமிபுரம், பி.டி.ஆர். திருமண மண்டபம், அண்ணாநகர் மண்டலம், வார்டு-94ல் சிட்கோ நகர், ராஜராஜேஸ்வரி திருமண மண்டபம், ஆலந்தூர் மண்டலம், வார்டு-167ல் நங்கநல்லூர், 100அடி சாலை ஸ்கேட்டிங் மையம், அடையாறு மண்டலம், வார்டு-179ல் குப்பம் கடற்கரை சாலை, சமூகநலக் கூடம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

=> 17.072025 அன்று 6 வார்டுகளில் நடைபெறவுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களின் விவரங்கள் :-

மாதவரம் மண்டலம், வார்டு-32ல் அம்பத்தூர் ரெட்ஹில்ஸ் சாலை, ஸ்ரீவரத மஹால், இராயபுரம் மண்டலம், வார்டு-49ல் பழைய வண்ணாரப்பேட்டை, மைனா பார்ட்டி ஹால், அம்பத்தூர் மண்டலம், வார்டு-80ல் கிழக்கு பானுநகர், புதூர், மல்லிகா மஹால், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-130ல் வடபழனி, 100அடி சாலை, ஆர்த்தி மஹால், பெருங்குடி மண்டலம், வார்டு-184ல் பஞ்சாயத்து ஆபிஸ் சாலை, 184வது வார்டு அலுவலகம், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192ல் நீலாங்கரை, சுகன்யா திருமண மண்டபம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

=> 18.07.2025 அன்று 6 வார்டுகளில் நடைபெறவுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களின் விவரங்கள் :-

மணலி மண்டலம், வார்டு-15ல் மணலி புதுநகர், சென்னை தொடக்கப்பள்ளி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-34ல் ஆர்.வி.நகர், குருமூர்த்தி பள்ளி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-64ல் சீனிவாசன் நகர், பழைய பள்ளிக் கட்டடம், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-110ல் மகாலிங்கபுரம், சூசைபுரம், சர்ச் ஆஃப் செயின்ட் ஜோசப் தி ஒர்க்கர், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-144ல் மதுரவாயல், ஸ்ரீபாக்யலஷ்மி திருமண மண்டபம், ஆலந்தூர் மண்டலம், வார்டு-156ல் முகலிவாக்கம், வி.ஜி.எஸ். பிருந்தாவன் கார்டன் எக்ஸ்டென்சன், சமூக நலக் கூடம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!

=> 15.07.2025 முதல் 14.08.2025 வரை 109 வார்டுகளில் நடைபெறவுள்ள ங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களின் விவரங்கள் வருமாறு :-

banner

Related Stories

Related Stories