தமிழ்நாடு

நாளை சென்னையின் இரண்டு இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என அறிவிப்பு.. விவரம் உள்ளே !

நாளை சென்னையின் இரண்டு இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என அறிவிப்பு.. விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாளை மாலை 04.00 மணியளவில் சென்னை மணலியில் அமைந்துள்ள பெட்ரோ கெமிக்கல் லிட் மற்றும் எண்ணூரில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகம் லிட் ஆகிய பகுதிகளில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை ஏற்பாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " ஒன்றிய உள்த்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி சில முக்கிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு அவர்கள் தலைமையில் கடந்த 06.05.2025 அன்று மாநில மற்றும் மத்திய அரசின் துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

நாளை 08.05.2025 அன்று சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, சென்னை பெட்ரோ கெமிக்கல் லிட்., மணலி மற்றும் காமராஜர் துறைமுகம் லிட்., எண்ணூர் ஆகிய இடங்களில் மாலை 04.00 மணியளவில் நடக்க உள்ளது. இந்த பயிற்சியின் போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எவ்விதமான அவசரக்கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.

நாளை சென்னையின் இரண்டு இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என அறிவிப்பு.. விவரம் உள்ளே !

மாநில அவசர கால செயல்பாட்டு மையம் இந்த ஒத்திகை பயிற்சியினை ஒருங்கிணைக்கும் மற்றும் இதில் மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், தேசிய சாரணர் இயக்கம், தேசிய சேவை திட்ட தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையினை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும். இப்பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

banner
live tv