இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இக்கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை :-
1. பள்ளி பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டினைச் சேர்த்திடும் விதமாக உடற்கல்விப் பாடத்திட்டம் உரிய வகையில் மாற்றியமைக்கப்படும்.
2. உலகில் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
3. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.572 கோடி நிதி ஒதுக்கீடு.
தொழிலாளர் நலன்:
1. திசையன்வினை, ஏம்பல், சாலவாக்கம், செம்பனார்கோவில், தா.பழுர், உத்திரகோசமங்கை, மணப்பாறை, காங்கேயம், குறுக்கள்பட்டி, திருச்செங்கோடு ஆகிய 10 இடங்களில் தலா 4 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.152 கோடியில் துவக்கப்படும். இதன் மூலம் 1308 மாணவர்கள் பயனடைவார்கள்.
2 கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பரங்குன்றம், மண்ணச்சநல்லூர், பேரூர், காரியமங்கலம் ஆகிய இடங்களில் விடுதி வசதியுடன் 7 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.148 கோடியில் துவக்கப்படும்.
3. 40 வயதிற்கு மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோனை செய்வதற்கு மருத்துவ பரிசோனை அட்டை வழங்கப்படும்.
4. 2000 இணையம் சார்ந்த சேவைப் பணித் தொழிலாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் மானியத்துடன் இருசக்கர மின் வாகனம் வழங்கும் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.
5. இணையம் சார்ந்த சேவைப் பணி தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
6. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1,975 கோடி நிதி ஒதுக்கீடு.