தமிழ்நாடு

2025 - 26 நிதிநிலை அறிக்கை : உயர் கல்வித்துறையில் இடம் பெற்ற 10 முக்கிய அம்சங்கள் இதோ!

சென்னை மற்றும் கோவையில் அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்கள் ரூ.100 கோடியில் உருவாக்கப்படும்.

2025 - 26 நிதிநிலை அறிக்கை : 
உயர் கல்வித்துறையில் இடம் பெற்ற 10 முக்கிய அம்சங்கள் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

இக்கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். உயர்கல்வித்துறையில் இடம் பெற்ற சில முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

1. அரசுப் பல்கலைக்கழகங்களின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் வண்ணம், தொகுப்பு நிதி நல்கை ரூ.700 கோடி உயர்த்தி வழங்கப்படும்.

2. அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கம் ரூ.50 கோடியில் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்படும்.

3. திறன்மிகு உற்பத்தி, இணையப் பாதுகாப்பு, உணவுத் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம், ஆளில்லா வான்கலம் வடிவமைப்பு ஆகிய துறைகளில் புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

4. பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

5. 7.5% உள் ஒதுக்கீட்டில் உயர்கல்வி படித்து வரும் 41,038 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும். ரூ.550 கோடி நிதி ஒதுக்கீடு.

6. சென்னை அறிவியல் மையம் ரூ.100 கோடியில் உருவாக்கப்படும்.

7. சென்னை மற்றும் கோவையில் அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்கள் ரூ.100 கோடியில் உருவாக்கப்படும்.

8. ஒன்றிய அரசின் குடிமைப் பணி தேர்வில், முதன்மை தேர்வில் பெற்றி பெற்று நேர்முகத் தேர்விற்குத் தயாராகும் இளைஞர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

9. அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயின்றிட உதவித்தொகை அளிக்கும் வகையில் ரூ.10 கோடி நிதி வழங்கப்படும்.

10. உயர்கல்வித்துறைக்கு ரூ.8,494 கோடி நிதி ஒதுக்கீடு.

banner

Related Stories

Related Stories