தமிழ்நாடு

நீதிபதியாகும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்... திராவிட மாடல் ஆட்சியின் மகுடம் - ஆர்.எஸ்.பாரதி அறிக்கை !

பழங்குடியினத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி உரிமையில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளது சமூகநீதிக்கும், திராவிட மாடல் ஆட்சிக்கும் கிடைத்த மற்றுமொரு மகுடமாகும் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

நீதிபதியாகும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்... திராவிட மாடல் ஆட்சியின் மகுடம் - ஆர்.எஸ்.பாரதி அறிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபதி என்ற பெண். மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் பிரிவை சேர்ந்த இவர், ஏலகிரி மலையில் கல்வி கற்றார். இதைத்தொடர்ந்து B.A.,B.L., சட்டப்படிப்பை படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் திருமணம் நடைபெற்றது.

எனினும் படிப்பை கைவிடாத இவர், தனது குடும்பத்தினர் உறுதுணையால் சட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு பயின்று வந்த இவர், தற்போது அந்த தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாக சாதித்து காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், இதற்கு காரணமாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு குறித்தும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனிதனின் அடிப்படைத் தேவைகள்கூட இல்லாத - எவ்வித வசதிகளும் இல்லாத - மலைவாழ் கிராமமான திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதே நிரம்பிய பழங்குடியினத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி , உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றதற்கு முதற்கண் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதிபதியாகும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்... திராவிட மாடல் ஆட்சியின் மகுடம் - ஆர்.எஸ்.பாரதி அறிக்கை !

இவரது வெற்றி "சமூகநீதி காவலர்"களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டில், ‘எல்லோருக்கும் எல்லாமும்’ எனும் அடிப்படையைக் கொண்டு "திராவிட மாடல்" ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ‘தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை’ என்ற அரசாணையின் வழியே உரிமையில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளது சமூகநீதிக்கு, திராவிட மாடல் ஆட்சிக்கும் கிடைத்த மற்றுமொரு மகுடமாகும்.

இத்தருணத்தில், தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, நூறாண்டு காலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எவரும் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்ததில்லை. இதை உணர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள், பல உயர் சாதியினரின் எதிர்ப்புக்கு இடையே பட்டியலினத்தைச் சேர்ந்த திரு. வரதராஜன் அவர்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்து வெற்றி கண்டார். தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதன்முதலாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு நடைபெற்றது. பின்னாளில், அதே வரதராஜன் அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ஐம்பதாண்டுகளுக்கு முன்பு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நிகழ்த்திய வரலாற்று நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில், உரிமையியல் நீதிபதி தேர்வில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இந்நிகழ்வின் மூலம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் அடியொற்றி ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருப்பதன் மூலம் “திராவிட மாடல்” அரசுக்கு பெருமை தேடி தந்த திருமதி ஸ்ரீபதி அவர்களுக்கு வழக்கறிஞர் என்ற முறையில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories