முரசொலி தலையங்கம்

“அனைவருக்குமான அரசு திராவிட மாடல் அரசு... அதற்கு இதுவே சான்று...” - முரசொலி தலையங்கம் பாராட்டு!

அன்பாய், ஆசையாய் விழா எடுத்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டி இருக்கிறார்கள் அரசு ஊழியர்கள் என்று முரசொலி தலையங்கம் பாராட்டியுள்ளது.

“அனைவருக்குமான அரசு திராவிட மாடல் அரசு... அதற்கு இதுவே சான்று...” - முரசொலி தலையங்கம் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முரசொலி தலையங்கம்

10.02.2026

ஆசையாய் பாராட்டிய அரசு ஊழியர்கள்!

அன்பாய், ஆசையாய் விழா எடுத்து மாண்புமிகு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டி இருக்கிறார்கள் அரசு ஊழியர்கள்.

அரசு ஊழியர்களின் 23 ஆண்டு காலக் கோரிக்கையை மட்டுமல்ல; அவர்களது பல்வேறு கோரிக்கைகளை, விருப்பங்களை கடந்த ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றி 'அரசு ஊழியர்களின் அரசு இது' என்பதை மெய்ப்பித்து வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அவருக்கு சென்னையில் மாபெரும் நன்றி அறிவிப்பு மாநாட்டை அனைத்து அரசு ஊழியர் சங்கங்களின் கூட்- டமைப்பானது நடத்திக் காட்டியது.

‘எனக்கு நன்றி தெரிவித்து என்னை உங்களிடம் இருந்து வேறுபடுத்தி விடாதீர்கள்' என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்னபோது அரங்கமே மகிழ்ச்சியால் அதிர்ந்தது. 'அமைச்சரவையும் நீங்களும் சேர்ந்தால்தான் அரசாங்கம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் நாம். தமிழ்நாடு அரசின் அனைத்துத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்து இந்த ஆட்சிக்கு நல்ல பெயர் ஏற்படுத்தித் தந்தவர்களே தாங்கள்தான். எனவே உங்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்' என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியால், நிறைந்து போனார்கள் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்.

மாநாட்டில் உரையாற்றிய அரசு ஊழியர் அமைப்பின் தலைவர்கள் அனைவரும், முதலமைச்சரை மனமாரப் பாராட்டினார்கள். ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் பேசும் போது, “அரசு ஊழியர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட இந்தமகத்தான ஓய்வூதியத் திட்டத்தின் மூலம், ஒரு தலைமுறை அல்ல அல்ல; ஏழேழுதலைமுறை அரசுப் பணியாளர்கள் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்குகடமைப்பட்டவர்களாக உள்ளனர்.

“அனைவருக்குமான அரசு திராவிட மாடல் அரசு... அதற்கு இதுவே சான்று...” - முரசொலி தலையங்கம் பாராட்டு!

நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அந்தக்காலத்தில், 'நான் இருக்கிறேன், நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என்று துணையாக நின்று உறுதிஅளித்தவர்தான் இன்றைய முதலமைச்சர். நமது ஆட்சி வந்தால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அவர் அளித்த வாக்குறுதியைப் போலவே இன்று அதனை நடைமுறையில் நிறைவேற்றித் தந்துள்ளார். இதுவே தாயுள்ளம் படைத்த தலைவரின் அடையாளம்” என்று உள்ளத்தில் இருந்து பாராட்டினார்.

“பத்து லட்சம் குடும்பங்களின் நெஞ்சில் முதலமைச்சர் நிறைந்துள் ளார். பேசாமலேயே செயலில் காட்டி உள்ளார். பொதுவாக குழு போட்டு, கிடப்பில் போடுவார்கள். ஆனால் குழு போட்டு உயிர் கொடுத்த முதலமைச்சர் இவர் தான்” என்று தாஸ் குறிப்பிட்டார். தமிழ்நாடு ஜாக்டோ - ஜியோ அமைப்பின் தலைவரே தமிழ்நாடு முதலமைச்சர் தான் என்றும் மகுடம் சூட்டினார்.

ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பேசும் போது, “2006 ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கு எத்தனையோ திட்டங்களை அறிவித்தவர் கலைஞர் அவர்கள். அந்த வழியில்2026 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கான திட்டங்களை அறிவித்துள்ளார் இன்றைய முதலமைச்சர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை எடுத்தது முந்தைய அ.தி.மு.க. அரசு. மீண்டும் தி.மு.க. அரசு தான் வரும். இன்னும் பல திட்டங்களை இந்த முதலமைச்சர் தான் செய்து தருவார்” என்று குறிப்பிட்டார்.

"தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension scheme - TAPS)" என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். இது அரசு ஊழியர்களின் 23 ஆண்டு காலக் கோரிக்கை ஆகும். இதனைச் செயல்படுத்த முடியாது, இதனால் தி.மு.க. அரசுக்கு அரசு ஊழியர்கள் மத்தியில் கெட்ட பேர் ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நினைத்தார். அவதூறுகள் செய்தார், அவரது எண்ணத்தில் மண் விழும் வகையில் புதிய திட்டத்தைக் கொடுத்தார் முதலமைச்சர், இதனை அறிவித்த பிறகும் அரசு ஊழியர்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்த, குழப்பத்தை ஏற்படுத்தப் பார்த்தார் பழனிசாமி, ஆனால் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

“அனைவருக்குமான அரசு திராவிட மாடல் அரசு... அதற்கு இதுவே சான்று...” - முரசொலி தலையங்கம் பாராட்டு!

இந்த ஓய்வூதியத் திட்டம் எவ்வளவு சிறப்பானது என்பதை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெ.சோமசுந்தரம் அவர்கள், 'தீக்கதிர்' நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் தெளிவாக உள்ளது.

* உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டம் போராட்டக் களத்தில் ஒரு மைல் கல் என்றும்

* 23 ஆண்டு காலப் போராட்டத்தில் இது மிக முக்கியமான முன்னேற்றம் என்றும்

* ஒன்றிய அரசின் திட்டத்தில் கூட உத்தரவாதம் இல்லை, தமிழ்நாடு அரசின் திட்டத்தில்தான் முழுமையான அரசு உத்தரவாதம் இருக்கிறது என்றும் -

* 20 ஆண்டுகளுக்கும் மேலாக மறுக்கப்பட்ட பணிக்கொடை இப்போது கிடைத்திருக்கிறது என்றும்

* பா.ஜ.க. ஆளும் எந்த மாநிலமும் பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டு வரவில்லை என்றும்

* ஓய்வுக் காலத்தில் நிம்மதியான பென்சன் கிடைப்பதற்கான வாசல் திறந்திருக்கிறது என்றும் அவர் பேட்டி அளித்துள்ளார்.

இதைவிட அரசுக்கு கிடைக்கும் பாராட்டு வேறு இருக்க முடியாது, அதிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தரும் குடைச்சல்களுக்கு மத்தியில் இவை செய்து தரப்பட்டுள்ளன.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச் சரியாகச் செயல்பட்டு உள்ளார் என்பதை அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு எடுத்த நன்றி தெரிவிக்கும் மாநாடு நாட்டுக்கு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்குமான அரசு இது!

banner

Related Stories

Related Stories