அரசியல்

“இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா?” : விஜய்யின் தீபாவளிப் பரிசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன?”

“இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா?” : விஜய்யின் தீபாவளிப் பரிசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தொகுதியில் உள்ள குறைகளைத் தெரிவிக்க வருபவர்கள் மீது அடாவடித் தாக்குதல் நடத்துவது, பெண் ஆட்சியர் என்றும் பாராமல் ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது என த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆனால், இதனைக் கண்டிக்க வேண்டிய த.வெ.க தலைமை, கண்டும் காணாமல் தங்களது வார விடுமுறையை அனுபவிக்க சென்றுவிடுகிறது.

இதனைக் கண்டித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

“தவறு செய்தால் விடமாட்டேன்” என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.

“இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா?” : விஜய்யின் தீபாவளிப் பரிசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?

பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன?

இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.

இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!

Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!”

banner

Related Stories

Related Stories