தமிழ்நாடு

வாபஸ் பெறப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த போராட்டம் : முதலமைச்சர் உறுதியை அடுத்து அறிவிப்பு !

முதலமைச்சரை சந்தித்து பேசிய நிலையில் நாளை நடைபெற இருந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தெரிவித்துள்ளார்.

வாபஸ் பெறப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த போராட்டம் : முதலமைச்சர் உறுதியை அடுத்து அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கமான ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும் என்றும், எனவே வேலை நிறுத்த அறிவிப்பினை அரசு ஊழியர்கள் கைவிட வேண்டும் என்றும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சூழலில் அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சட்னிது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நாளை நடைபெறுவதாக இருந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து ஜாக்டா ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஆசிரியர் உரிமைக்காக கடந்த 7 ஆண்டுகாலமாக போராடி வருகிறோம். நேற்று மூன்று அமைச்சர்களை சந்தித்து பேசினோம். எங்களின் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்கள்.

வாபஸ் பெறப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த போராட்டம் : முதலமைச்சர் உறுதியை அடுத்து அறிவிப்பு !

அதன்படி இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினோம். அப்போது நான் செய்யாமல் யார் செய்வார்கள் நம்பிக்கையோடு இருங்கள் என்றும், மிக விரைவில் நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.

அதன் அடிப்படையில் முதல்வர் கோரிக்கைக்கு இணங்க நாளை நடக்க இருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம். மேலும் 19ஆம் தேதி பிறகு மீண்டும் ஜாக்டோ ஜியோ கூட்டம் கூடி 26 ஆம் தேதி போராட்டம் குறித்து அறிவிப்போம்.19 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்குள் ஏதேனும் ஒரு அறிவிப்பு வெளியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.மீண்டும் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories