அரசியல்

“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!

“பிஎம்-உஷா திட்டத்தின் தலையீடுகள் இருந்தபோதிலும், ஆசிரியர்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், டிஜிட்டல் கற்றல் வசதிகள் மற்றும் மாணவர் ஆதரவு சேவைகளில் தொடர்ந்து நீடிக்கும் போதாமைகளை தீர்க்க வழிமுறைகள் என்ன?”

“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாடாளுமன்றத்தின் 2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், ஜன.28 அன்று ஒன்றிய அரசின் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று (பிப்.09) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு,

ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட பிஎம்-சேது திட்டம் மற்றும் பிரதான் மந்திரி உச்சாத்தர் சிக்ஷா அபியான் (பிஎம்-உஷா) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தி.மு.க மக்களவை உறுப்பினர்கள் ஜி.செல்வம் மற்றும் சி.என்.அண்ணாதுரை ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவர்கள் தெரிவித்ததாவது, “பிஎம்-சேது திட்டத்தின்கீழ் மேம்படுத்துவதற்காகத் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஐடிஐ-க்களின் எண்ணிக்கை என்ன?

இந்த நவீனமயமாக்கல் முயற்சிகளின் விளைவாக, மாணவர்கள் பெறும் மேம்படுத்தப்பட்ட வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் என்ன?

கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கூறிய மற்றும் அது தொடர்பான பிற திட்டங்களின்கீழ் தமிழ்நாட்டில் உள்ள ஐடிஐ-க்களை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதிகள் குறித்த விவரங்கள் என்ன?

“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!

கடந்த மூன்று ஆண்டுகளில் பிஎம்-உஷா திட்டத்தின்கீழ் ஆதரவளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட மாநிலத்தின் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதிகளின் விவரங்கள் யாவை?

பிஎம்-உஷா திட்டத்தின் தலையீடுகள் இருந்தபோதிலும், ஆசிரியர்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், டிஜிட்டல் கற்றல் வசதிகள் மற்றும் மாணவர் ஆதரவு சேவைகளில் தொடர்ந்து நீடிக்கும் போதாமைகளை தீர்க்க வழிமுறைகள் என்ன?

மாநிலத்தில் பிஎம்-உஷா ஆதரவு பெற்ற கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை, மற்றும் வேலைவாய்ப்பில் ஏற்பட்ட மேம்பாடுகள் குறித்து அரசாங்கத்தால் நடத்தபட்ட மதிப்பீட்டு ஆய்வுகள் என்ன?

பிஎம்-உஷா நிதியுதவியானது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மேம்படுத்தப்பட்ட கல்வித் தரம் மற்றும் அனைவருக்கும் உயர்தர உயர்கல்விக்கான சமமான வாய்ப்பாக அமைவதை உறுதிசெய்ய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் யாவை?”

banner

Related Stories

Related Stories