தமிழ்நாடு

திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!

இன்று நடைபெற்ற திமுக வழக்கறிஞர் அணி கூட்டத்தில் தவெக அரசுக்கு எதிராக 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக சட்டத்துறை சார்பில் வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் கூட்டம் இன்று (ஆக.16) நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவரும், கழக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்‌ கலந்து கொண்டு உரையாற்றினார்.

தொடர்ந்து இந்த கூட்டத்தில் தவெக அரசை கண்டித்து 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானங்களின் விவரம் வருமாறு :-

=> தீர்மானம் 1 :

மேகதாது விவகாரத்தில் த.வெ.க அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து கண்டனம்

=> தீர்மானம் 2 :

தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய கழக இளைஞரணி செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து தவெக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!

=> தீர்மானம் 3 :

கழக தலைவர் ஸ்டாலின் மீது சமூக வலைதளங்களில், தொலைக்காட்சி விவாதங்களில் அறுவெறுக்கத்தக்க வகையில் விமர்சிப்பவர்கள் மீது காவல்துறையில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டித்து கண்டனம்

=> தீர்மானம் 4 :

கோவை மாணவர் கொலை வழக்கில் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

=> தீர்மானம் 5 :

தமிழ்நாட்டில் நாள்தோறும் குற்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. தவெக அரசுக்கு கடும் கண்டனம். மேடைக்கு மேடை மத்திய விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு இல்லை. 100நாட்களில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.

=> தீர்மானம் 6 :

கொளத்தூர் தொகுதியில் EVM மெஷின் முறையாக பாதுகாக்கப்படாத நிலை நாடறியும். வெளிப்படைத்தன்மை இல்லாத EVM மெஷின் மாற்றாக வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வலியுறுத்தி, இதனை சட்டப்போராட்டமாக இறுதி வரை வழக்கறிஞர் அணி மேற்கொள்ளும்.

banner

Related Stories

Related Stories