தமிழ்நாடு

மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!

பட்டியல் சாதி/பழங்குடியின அதிகாரிகளுக்குத் "தனித் தகுதி" பதவி உயர்வு வழங்கும் கொள்கை செயல்படுத்தப்படாதது ஏன்?

மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திறமையும் முறையான பயிற்சியும் பெற்றிருந்தபோதிலும், கணிசமான எண்ணிக்கையிலான திறமையான தொழிலாளர்கள் வேலையின்றி அல்லது பகுதி நேர வேலையுடன் இருந்து, வேலை தேடி மற்ற மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ புலம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது குறித்து திமுக மக்களவை உறுப்பினர் அ. மணி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:-

தருமபுரி போன்ற அதிக அளவில் மக்கள் வெளியேறும் மாவட்டங்களில், திறமையான தொழிலாளர்களிடையே வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளதற்கு காரணங்களை அரசு ஆராய்ந்துள்ளதா? திறன் பயிற்சிக்கும் தொழில்துறைத் தேவைக்கும் இடையிலான இடைவெளிகள், உள்ளூர் வேலைவாய்ப்புகளின் பற்றாக்குறை,

பயிற்சி பெற்ற தொழிலாளர்களிடையே நிலவும் இத்தகைய தொடர்ச்சியான வேலையின்மைக்கு அரசாங்கத்தால் கண்டறியப்பட்ட காரணங்கள் யாவை? திறன் மேம்பாட்டு திட்டங்களை உள்ளூர் தொழில்துறைத் தேவைகளுக்கேற்ப ஒருங்கிணைக்கவும் பின்தங்கிய பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதை ஊக்குவிக்கவும், பயிற்சிப் பணிகளையும் வேலைவாய்ப்பு ஆதரவையும் வலுப்படுத்தவும், திறமையான இளைஞர்களின் கட்டாயப் புலம்பெயர்வதைக் குறைக்கவும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட/எடுக்கப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் யாவை?

பட்டியல் சாதி/பழங்குடியின அதிகாரிகளுக்குத் "தனித் தகுதி" பதவி உயர்வு வழங்கும் கொள்கை செயல்படுத்தப்படாதது ஏன்?

பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) அலுவலக குறிப்பாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மத்திய நேரடி வரிகள் வாரிய அலுவலகத்திலும் அதன் 18 கேடர் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடமும், பட்டியல் சாதி/பழங்குடியின அதிகாரிகளுக்குத் தகுதியுடன் கூடிய பணிமூப்பு அடிப்படையில் "தனித் தகுதி" பதவி உயர்வு வழங்கும் கொள்கை செயல்படுத்தப்படாதது தொடர்பாக அரசாங்கத்திற்கு ஏதேனும் புகார்கள் வந்துள்ளனவா என்றும் துறையில் "தனித் தகுதி" பதவி உயர்வுகள் செயல்படுத்தப்படாததால் 10,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் தேங்கிக் கிடக்கின்றன என்றும் அவற்றை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிரப்ப அரசாங்கத்தால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன? என்றும் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்?

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பிற்காக, மாநில அரசு முன்கூட்டியே வழங்கிய ₹9,500 கோடியை விடுவிப்பது தொடர்பாக, தமிழ்நாடு அரசிடமிருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்தும், நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏன் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளுக்கான முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட பங்கை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணங்கள் யாவை? இரண்டாம் கட்டத் திட்டம் முழுவதையும் முடிப்பதற்கான காலக்கெடு என்ன, மேலும் முதல் செயல்பாட்டுப் பகுதி (பூந்தமல்லி முதல் போரூர் வரை) எப்போது தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது? என்றும் அவர் கேட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories