அரசியல்

குற்றங்களைக் குறைக்க ‘யாக பூஜை’... உத்தரப் பிரதேசத்தைப் பின்தொடரும் தமிழ்நாடு! - த.வெ.க. ஆட்சியின் அவலம்!

இந்திய அரசியலமைப்பின்படி, அனைவருக்கும் தங்களது மதங்களைத் தேர்வு செய்ய உரிமையுண்டு; வழிபடவும் உரிமையுண்டு. ஆனால், அதனைக் காவல் நிலையத்தில் வைத்தா செய்வது?

குற்றங்களைக் குறைக்க ‘யாக பூஜை’... உத்தரப் பிரதேசத்தைப் பின்தொடரும் தமிழ்நாடு! - த.வெ.க. ஆட்சியின் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

அனைத்து மதங்களையும் மதித்து, மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் தமிழ்நாட்டில், பா.ஜ.க.வின் ஆட்சி த.வெ.க. உருவில் ஊடுருவியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் முன்மொழிந்து, அனைவருக்கும் உரிமைகள் வழங்க வழிவகுத்தபோது, அதனைக் கடுமையாக எதிர்த்த இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரத்துவ, எளிய மக்களை அடிமைப்படுத்துகிற கொள்கைகளை முன்னிறுத்தி ஆட்சியில் அமர்ந்து, சிறுபான்மையின மக்கள் மீதும் எளிய மக்கள் மீதும் அடாவடித் தாக்குதல் நடத்தி வருகிறது பா.ஜ.க. அரசு. அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தமிழ்நாட்டிற்குள் புகுந்தால், மக்களிடையே பிரிவினைவாதம் ஓங்கிவிடும் என்பதற்காக, ஆர்.எஸ்.எஸ். பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது; சுயமரியாதைக் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

ஆனால், த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புடன், ஆர்.எஸ்.எஸ். பேரணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் ஜோதிடருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. காவி அணிந்த யோகி ஆதித்யநாத்தையடுத்து, கோட் அணிந்த விஜய்யின் ஆட்சியில் சுயமரியாதை கரைந்து வருகிறது.

குற்றங்களைக் குறைக்க ‘யாக பூஜை’... உத்தரப் பிரதேசத்தைப் பின்தொடரும் தமிழ்நாடு! - த.வெ.க. ஆட்சியின் அவலம்!

இப்படியான சூழலில், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுக்குள் கொண்டுவர இயலாமல், யாக பூஜை நடத்தி குற்றங்களைக் கட்டுக்குள் கொண்டுவர முன்வந்திருக்கிறார் சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர். செஞ்சியில் சிறுமி காணாமல் போய் 40 நாட்களைக் கடந்தும், குழந்தை குறித்த எந்தத் தகவலையும் காவல்துறை கண்டறியவில்லை; த.வெ.க. அரசும் அதில் நாட்டம் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. இதற்குத் தமிழ்நாட்டளவில் கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், அவை திசைதிருப்பல் அரசியலால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.

“இந்த அவலத்தைப் போக்க யாக பூஜை நடத்தினால் சரியாகிவிடுமா?” என்ற கேள்வி வலுத்துள்ளது. இந்திய அரசியலமைப்பின்படி, அனைவருக்கும் தங்களது மதங்களைத் தேர்வு செய்ய உரிமையுண்டு; வழிபடவும் உரிமையுண்டு. ஆனால், அதனைக் காவல் நிலையத்தில் வைத்தா செய்வது?

மதச்சார்பற்ற ஆட்சி நிர்வாகத்தில், இதுபோன்ற செயல் அரங்கேறுவதை இதுவரை உத்தரப் பிரதேசம் கண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலும் இது காணப்படுவது, எதிர்வரும் காலங்களில் எந்த எல்லை வரை செல்லும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“பூஜைகளால் குற்றங்கள் குறையும் என்றால், காவல்துறை அதிகாரி ஆவதற்கு ஏன் உடல்தகுதி, கல்வித்தகுதி எல்லாம்? மந்திரங்களைக் கற்றுக்கொண்டால் போதுமானதல்லவா?” என்ற கேள்விகளும் மக்கள் மனத்தில் எழத் தொடங்கியுள்ளன.

காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், இனியும் தன்னுடைய ‘அமைதிப்படை அமாவாசை’லாமல், தரங்கெட்டுப்போகும் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories