தமிழ்நாடு

நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா... அமைச்சர் மா.சு. வழங்கினார்!

முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசின் மூலம் உரிய தடையின்மைச் சான்று பெறப்பட்டு 158 நரிக்குறவர் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆணைகளாக வழங்கப்பட்டுள்ளது.

நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா... அமைச்சர் மா.சு. வழங்கினார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (09.02.2026) வருவாய்த்துறை சார்பாக, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டம், கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி மற்றும் அரசுப் பண்ணை, மடுவன்கரை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாக்களில் 158 நரிக்குறவர் பிரிவு பயனாளிகள் உட்பட்ட மொத்தம் 299 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகளை வழங்கினார். 

தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலனுக்காக எண்ணற்ற அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள பழங்குடியினர் சமூக மக்களான நரிக்குறவர்கள் நலனுக்காக குடியிருப்பு, வீட்டுமனை பட்டா வழங்கின உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். 

நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா... அமைச்சர் மா.சு. வழங்கினார்!

சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை அருகே உள்ள கோட்டூர்புரம் பகுதியில் 158 நரிக்குறவர் குடும்பமாக வசித்து வருகிறார்கள். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நரிக்குறவர் என்று அழைப்பது கண்ணியக் குறைவு என்று கருதி அவர்கள் நறி தவறாதவர்கள். நரிக்குறவர்கள் என்று குறிப்பிட்டார். 1980 ஆம் ஆண்டு இப்பகுதி நரிக்குறவர் மக்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல இப்பகுதியில் குடிசை வீடுகளாக இருந்த சமயத்தில் அடிக்கடி தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்ட காரணத்தினால் குடிசை வீடுகளுக்கு மாற்றாக ஹாஸ்பெடாஸ் ஓடுகள் பதித்த வீடுகளாக கட்டி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

தற்போது, கோட்டூர்புரம், ஜிப்ஸ் காலனி பகுதியில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கு நிரந்தர இருப்பிடம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் 158 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆணைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த இடம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடமாகும். முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசின் மூலம் உரிய தடையின்மைச் சான்று பெறப்பட்டு 18 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் இப்பகுதி மக்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டாக்களாக வழங்கப்பட்டுள்ளது. 

banner

Related Stories

Related Stories