
சென்னை தலைமைச் செயலகத்தில் ஜார்ஜ் கோட்டையில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகை பத்தாவது மாடிக்கு முதல்வர் விஜய் அலுவலக மாற்றப்படவிருக்கிறது. இதற்கான பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக ரூ.5 கோடி செலவில் பொதுப்பணித்துறை சார்பில் குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்பணிகளை 3 மாதங்களுக்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக டென்டரில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாணிக்கம் அண்ட் கோ என்ற ஒப்பந்த நிறுவனம் சார்பில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகளானது 90% நிறைவடைந்த நிலையில், இன்னும் 10% பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளது.
இந்த சூழலில் திடீரென பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 12-ம் தேதி நாமக்கல் கவிஞர் மாளிகை பத்தாவது தளத்தில் பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே முடிந்த பணிகளுக்கு புதிதாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

காரணம் இந்த டெண்டரில் அனைத்து ஒப்பந்ததாரர்களும் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் ஏற்கனவே பணியை ஒரு நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில், அனைவரும் கலந்து கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். எனவே இது செட்டிங் டெண்டர் ஆகத்தான் இருக்கும் என்று கருதப்படுகிறது.

நாமினேஷன் டெண்டர் நடைமுறை பொறுத்தவரை 5 லட்சம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு டெண்டர் விட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இது ரூ.5 கோடி பணி என்பதால் டெண்டர் நிச்சயம் விட்டுத்தான் பணிகளை தொடங்கி இருக்க வேண்டும். மாறாக 90 சதவீத பணிகள் முடித்த பிறகு டெண்டர் விடுவது என்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜயோ, தனது ஆட்சியை ஊழலற்ற ஆட்சி என்று பெருமை பீத்திக்கொள்ளும் நிலையில், தற்போது இதுபோன்ற செட்டிங் டெண்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






