தமிழ்நாடு

‘‘நீரிழிவு தொடர்பான MD படிப்பை தொடங்க அனுமதி வேண்டும்..” - ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மா.சு கடிதம் !

தமிழ்நாட்டில் நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற பிரிவில் எம்டி படிப்பை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியாகுவிற்கு அமைச்சர் மா.சு கடிதம் எழுதி உள்ளார்

‘‘நீரிழிவு தொடர்பான MD படிப்பை தொடங்க அனுமதி வேண்டும்..” - ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மா.சு கடிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற பிரிவில் எம்டி படிப்பை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி ஒன்றிய அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியாகுவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு எழுதியுள்ள கடித்தில் "நீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட வளர்சிதை மாற்றக் கோளாறாகும். இது அரசாங்கத்திற்கும் தனிநபருக்கும் சுகாதார செலவினங்களை அதிகரிக்கிறது.

சீனாவிற்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிக அளவில் நீரிழிவு நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். 75 மில்லியன் (7.5 கோடி) பேர் முன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மொத்தம் 77 மில்லியன் அதாவது 7.7 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நீரிழிவு நோயின் பாதிப்பு சுமார் 10.4% ஆகும். அவசரத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், இந்த முன் நீரிழிவு நோய்களில் பெரும்பாலானவை வெளிப்படையான நீரிழிவு நோயாக விரைவாக மாறுகிறது, இது தமிழ்நாட்டின் சுமையை அதிகரிக்கிறது.

‘‘நீரிழிவு தொடர்பான MD படிப்பை தொடங்க அனுமதி வேண்டும்..” - ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மா.சு கடிதம் !

கடந்த சில ஆண்டுகளாக, நமது மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் தங்கள் சுகாதாரக் கொள்கைகளில் நீரிழிவு போன்ற தொற்றாத நோய்களைக் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. எனவே, எம்.டி., (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) படிப்பைத் தொடங்குவதன் மூலம், நாட்டில் இந்தச் சிறப்புத் துறையில் சுகாதார வல்லுநர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாநிலம் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து சுகாதார மையங்களிலும், மாநில மற்றும் ஒன்றிய அரசின், நீரிழிவு சிகிச்சை பிரிவுகளை உருவாக்கும் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்த இது உதவும் மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட புற மருத்துவமனைகளிலும் நீரிழிவு சிகிச்சை பிரிவுகளை உருவாக்கவும் உதவும்.

1986 ஆம் ஆண்டு முதல் சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள நீரிழிவு மருத்துவ பிரிவில் முழுநேர 2 ஆண்டு நீரிழிவு டிப்ளமோ படிப்பைத் தொடங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்திய நாட்டிலேயே இன்று வரை இந்திய மருத்துவ குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே படிப்பு இதுவாகும். ஒரு புதிய எம்.டி., (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) பாடத்திட்டத்தை உருவாக்குவதால், ஏற்கனவே உள்ள இந்திய மருத்துவ குழுமத்தால் அங்கீகாரம் பெற்ற நீரிழிவு மருத்துவத்தில் உள்ள டிப்ளமோ இருக்கைகளை பட்டப்படிப்பு இடங்களாக மாற்ற உதவுகிறது. இதனால் தேசிய மருத்துவ ஆணைய விதிகளின் படி இந்த சிறப்புப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலான பேராசிரியர்களை உருவாக்க உதவுகிறது.

‘‘நீரிழிவு தொடர்பான MD படிப்பை தொடங்க அனுமதி வேண்டும்..” - ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மா.சு கடிதம் !

தேசிய மருத்துவ ஆணைய விதிகளின் படி. எம்.டி., நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம் நோய்களுக்கான பட்டப்படிப்பு, எம்.டி (பொது மருத்துவம்), எம்.டி., (சமூக மருத்துவம்) & டி.எம் (எண்டோகிரைனாலஜி) ஆகியவற்றின் பயிற்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எம்.டி., (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) பாடத்திட்டத்தை PGMER, 2000 அட்டவணையில் தேசிய மருத்துவ ஆணையம் சேர்த்தால், தற்போதுள்ள நீரிழிவு மருத்துவத்தில் டிப்ளமோ இருக்கைகள் (1986 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டு இந்திய மருத்துவ குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டது) MD பட்டப்படிப்பு இடங்களாக மாற்றப்படலாம்.

சென்னை மருத்தவக் கல்லூரியில் MD (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்) பட்டப்படிப்பை தொடங்குவதற்கு PGMER'2000 இன் 1வது அட்டவணையில் “நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றம்" என்ற சிறப்புப் பாடத்தைச் சேர்ப்பதற்காக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்கனவே தேசிய மருத்துவ ஆணையத்திற்கு ஒரு கருத்துருவை அனுப்பியிருந்தது. தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மேற்கண்ட கருத்துருவினை சாதகமாக பரிசீலித்து, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் எம்.டி., படிப்பினை தொடங்குவதற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

‘‘நீரிழிவு தொடர்பான MD படிப்பை தொடங்க அனுமதி வேண்டும்..” - ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மா.சு கடிதம் !

தேசிய மருத்துவ ஆணையம், புது தில்லி, 23.02.2022 தேதியிட்ட கடிதத்தில், இப்படிப்பு தற்போதுள்ள அனைத்து படிப்புகளையும் தரமிறக்கும் என்பதால் மேற்கண்ட கோரிக்கையினை ஏற்கவில்லை என தெரிவித்துள்ளது. 2019 தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019ன் கீழ் பிரிவு 28(5)ன்படி, தமிழ்நாடு அரசின் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை, தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலரிடம் மேற்கண்ட பரிந்துரையை சாதகமாக பரிசீலித்து, வரும் கல்வியாண்டிலேயே இப்பட்ட மேற்படிப்பை தொடங்குவதற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மேல்முறையீடு செய்துள்ளது.

எனவே மேற்கூறிய கருத்துருவினை சாதகமாகப் பரிசீலித்து, வரும் கல்வியாண்டிலேயே இப்பட்ட மேற்படிப்பை தொடங்குவதற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories