அரசியல்

சிம்லா மாநகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றியது காங்கிரஸ்.. வடமாநிலங்களிலும் பின்னடைவில் பாஜக !

சிம்லா மாநகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.

சிம்லா மாநகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பின்னர்  கைப்பற்றியது காங்கிரஸ்.. வடமாநிலங்களிலும் பின்னடைவில் பாஜக !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

சிம்லா மாநகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பின்னர்  கைப்பற்றியது காங்கிரஸ்.. வடமாநிலங்களிலும் பின்னடைவில் பாஜக !

இந்த மத மோதல்கள் காரணமாக எளிய மக்களிடையே வகுப்புவாதத்தை தூண்டி அதன்மூலம் பாஜக தொடர்ந்து வெற்றிபெற்று வந்தது. ஆனால் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, விவசாய சட்டங்கள் என அடுக்கடுக்கான மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்தி தொடர்ந்து மக்களை பாஜக சுரண்டி வருகிறது. மேலும், தனது கார்பரேட் நண்பர்கள் வளர்ச்சிக்காக மக்களை தொடர்ந்து பாஜக புறம்தள்ளி வருகிறது.

ஒன்றிய பாஜக அரசின் இந்த உண்மை முகத்தை மக்கள் மெல்ல மெல்ல அறிந்துகொண்டே வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இமாசல பிரதேசத்தின் சிம்லா மாநகராட்சியில் மொத்தமுள்ள 34 வார்டுகளுக்கான வாக்கு பதிவு சமீபத்தில் நடந்தது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

சிம்லா மாநகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பின்னர்  கைப்பற்றியது காங்கிரஸ்.. வடமாநிலங்களிலும் பின்னடைவில் பாஜக !

இதில், மொத்தமுள்ள 34 வார்டுகளில் 24 வார்டுகளில் வென்று சிம்லா மாநகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. சிபிஐஎம் 1 வார்டில் வெற்றிபெற்ற நிலையில், 9 இடங்களில் மட்டுமே வென்று இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஏற்கனவே தென்மாநிலமான கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவும் என கருத்து கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பாஜக வலுவானதாக விளங்கும் வடமாநிலங்களில் அந்த கட்சி தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருவது அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories