முரசொலி தலையங்கம்

அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : முரசொலி தலையங்கம் புகழாரம்!

“செய்ய முடியாத சாதனையைச் செய்து காட்டிய முதலமைச்சர்!” என தலைப்பிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முரசொலி தலையங்கம் புகழாரம்.

அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகாலக் கோரிக்கை அது. 'அதை வழங்க முடியாது' என்று பவராலும் கருத்துச் சொல்லப்பட்டு வந்தது. 'இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசு ஊழியர்களின் நம்பிக்கையை தி.மு.க. அரசால் பெற முடியவில்லை' என்றும் எதிர்க்கட்சிகள் மனதுக்குள் சிரித்துக் கொண்டு இருந்தார்கள்.

ஆனால் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் குடும்பங்களின் உள்ளம் குளிரும் வகையில் மகிழ்ச்சியான, நிறைவான, வாழ்நாள் முழுவதும் மனம் மகிழும் அளவிலான அறிவிப்பைச் செய்து, யாராலும் செய்ய முடியாத சாதனையைச் செய்து காட்டி விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இருபது ஆண்டுகளாக தலைமைச் செயலகம் பார்க்காத காட்சியை நேற்றைய தினம் தலைமைச் செயலகம் கண்டது. முதலமைச்சர் அறைக்கு வந்த அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் கேக் ஊட்டினார்கள். அரசு ஊழியர்கள் முதலமைச்சர் அவர்களுக்கு கேக் ஊட்டினார்கள். அரசு ஊழியர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டார்கள்.

உறுதி அளிக்கப்பட்ட வாக்குறுதியை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாக அறிவித்து விட்டார் உறுதிமிக்க முதலமைச்சர் அவர் கள்.

'கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிதிநிலைமை சீரானதும் நிறைவேற்றுவோம்' என்றார் முதலமைச்சர். அதனைச் செய்து காட்டி விட்டார் முதலமைச்சர் அவர்கள்.

மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.

அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : முரசொலி தலையங்கம் புகழாரம்!

"ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

*ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந் தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

- இவ்வாறு அறிவித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

அரசு ஓய்வூதியம் என்பது அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுக்குப் பிறகும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய சமூக பாதுகாப்பு என்பதை உறுதி செய்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்பதன் மூலம் ஓய்வூதியப் பங்களிப்புக்கு செலுத்த வேண்டிய கூடுதல் பங்களிப்பு தொகையாக ரூ.13 ஆயிரம் கோடியும், பணியாளர்கள், ஆசிரியர்கள் நலனுக்காக அரசுப் பங்களிப்பாக ரூ.11 ஆயிரம் கோடியும் ஆக ரூ.24 ஆயிரம் கோடி நிதிச்சுமையை தமிழ்நாடு ஏற்றிருப்பதும், ஓய்வூதியர் மறைவுக்கு பிறகு குடும்ப ஓய்வூதியமாக 60 சதவீதம் வழங்கு முன்வந்திருப்பதும், நாட்டுக்கு முன்னுதாரணமாக அமையும்.

“எங்கள் ஓய்வு கால வாழ்க்கை அர்த்தமுள்ளதாக முதலமைச்சர் மாற்றி உள்ளார். இன்றைய அறிவிப்பின் மூலம் 6.5 லட்சம் பேர் வாழ்க் கையில் முதலமைச்சர் ஒளியேற்றி வைத்திருக்கிறார்" என்று அரசு ஊழியர் சங்கத்தினர் சொல்லி இருக்கிறார்கள்.

புதிய திட்டமாக தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்' (Taps) என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முன்பு இருந்து வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் மீண்டும் கிடைக்கும் வகையில் இத்திட்டம் இருக்கிறது.

அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : முரசொலி தலையங்கம் புகழாரம்!

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு முதலமைச்சரின் கருணையின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

ஒன்றிய அரசு தந்து வருகின்ற கடுமையான நிதி நெருக்கடிகளுக்கும், நிதிச் சுமைகளுக்கும் மத்தியிலும், "தமிழ்நாடு உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டம்" என்ற புதிய திட்டத்தை அறிவித்து விட்டார் முதலமைச்சர். அது தான் மிகமிக முக்கியமானது ஆகும்.

ஓய்வூதியத்தை வழங்குவது குறித்து, தகுந்த பரிந்துரைகளை வழங்கிட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலை மையில் ஒரு குழுவை அரசு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையை ஏற்று சிறப்புமிக்க அறிவிப்பை முதல்வர் வழங்கி இருக்கிறார். அமைச்சர் பெருமக்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபடி இருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக "தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய் வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme -TAPS)" செயல்படுத்திக் காட்டி விட்டார் முதலமைச்சர் அவர்கள்.

"முத்தமிழறிஞர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு எவ்வாறு காவலராக திகழ்ந்தாரோ அதேபோன்றுதான் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இருந்து வருகிறார். நாங்கள் நம்பி வந்ததை நிறைவேற்றி இருக்கிறார் முதலமைச்சர்" என்று சொல்லி இருக்கிறார்கள் அரசு ஊழியர் சங்கத்தினர்.

“நிதிநிலைமை சீரடைய சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலேயே நிறைவேறும்" என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

2003 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களை பாடாய் படுத்தினார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. பழனிசாமியும் தன் பங்குக்கு கொச்சைப்படுத்தினார். அரசு ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தை விளம்பரமாகப் போட்டு எரிச்சல் உண்டாக்கினார். இதனால் காயம் பட்ட அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இதயத்தில் பால் வார்த்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

banner

Related Stories

Related Stories