தமிழ்நாடு

பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட நர்ஸிங் மாணவி: போலிஸ் தேடும் கோவை தமன்னா யார்?

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட கோவை பெண் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட நர்ஸிங் மாணவி: போலிஸ் தேடும் கோவை தமன்னா யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமன்னா. இவர் டிப்ளமோ நர்ஸிங் படித்து முடித்துள்ளார். இவர் கோவையில் தங்கி 'பிரண்ட்ஸ் கால் மி தமன்னா' என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படி சமீபத்தில் இவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் பட்டகாத்தி மற்றும் சிகரெட்டு பிடித்துக் கொண்டிருந்த படி, 'எதிரி போட நினைத்தால், அவனைப் போடணும் என்ற பாட்டுக்கு ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டிருந்தார்.

பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட நர்ஸிங் மாணவி: போலிஸ் தேடும் கோவை தமன்னா யார்?

இந்த வீடியோ வன்முறையைத் தூண்டும் விதமாக இருந்ததை அடுத்து போலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார்.

மேலும், கோவையில் கடந்த மாதம் இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் சத்யாபாண்டி, கோகுல் ஆகிய 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 54 ரவுடிகளை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட நர்ஸிங் மாணவி: போலிஸ் தேடும் கோவை தமன்னா யார்?

மேலும், பிரகா பிரதர்ஸ் என்ற ரவுடி கும்பல் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டு வருகிறது. இந்த பக்கத்தை ஆறு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த ரவுடி கும்பலுடன் தமன்னாவுக்கு தொடர்பு இருப்பதும், இவர் 2021ம் ஆண்டு கஞ்சா கடத்தல் வழக்கில் காதலனுடன் கைதாகியது போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள தமன்னாவை போலிஸார் தேடி வருகின்றனர். மேலும் வன்முறையைத் தூண்டும் வகையில் ரீல்ஸ் வீடியோ வெளியிடுபவர்கள் மீது போலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories