தமிழ்நாடு

பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் ட்விட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு வந்தார். இதனால் கடந்த 2021ம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இவர் மீது புகார் அளித்தார்.

பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலிஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், கடந்த 2 மாதங்களில் மட்டும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக 18 ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கல்யாணராமனைக் கைது செய்து சிறையிலடைத்தனர். பின்னர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிட்டு வந்ததால் கல்யாணராமன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

இந்த வழக்கு தொடர்பாக சைபர் கிரைம் போலிஸார் விரிவாண விசாரணை மேற்கொண்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். பின்னர் இரு தரப்பு வாதங்களும் முழுமையானதை அடுத்து இன்று பா.ஜ.க கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories