மு.க.ஸ்டாலின்

“இதை நாம் எப்படியாவது மாற்றியாக வேண்டும்..” - மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

“இதை நாம் எப்படியாவது மாற்றியாக வேண்டும்..” - மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலக அளவில் மகளிர் தினம் கொண்டாடி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா 2023 நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8-ஆம் நாள் “உலக மகளிர் தினம்” கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. மார்ச்-8 என்பது மகளிருக்கு மட்டுமல்ல; மனிதகுலத்துக்கும், மனித உரிமைகளுக்கும் ஒரு முக்கியமான நாளாக அமைந்திருக்கிறது.

“இதை நாம் எப்படியாவது மாற்றியாக வேண்டும்..” - மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கக்கூடிய வகையில் எத்தனையோ திட்டங்கள், தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரை மாற்றி “சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை” என்று அதை இன்றைக்கு மாற்றிக் காட்டியிருக்கிறோம்.

இன்றைய காலக்கட்டத்தில், அதிகாரம் பொருந்தியவர்களாக பெண்களை உயர்த்துவதற்கான திட்டங்களைத் தீட்டி வருகிறோம். பெண்களை உயர்கல்வி படிக்க வைத்தல், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்கித் தருதல், மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல், கடன்கள் கொடுத்தல், புதிய தொழில்களைச் செய்ய வைத்தல், உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளைப் பெறுதல் - எனப் பெண்களை அனைத்து வகையிலும் முன்னேற்றி வருகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு.

“இதை நாம் எப்படியாவது மாற்றியாக வேண்டும்..” - மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

அனைத்தும் இணைந்த வளர்ச்சிதான் திராவிட மாடல். இதில் ஆணும் பெண்ணும் அடக்கம். பெண்ணை விலக்கி வைத்துவிட்டு எதையும் திட்டமிடுவது இல்லை. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் அதில் ஒரு பெண் ஓதுவாரும் இடம் பெற்றுள்ளார். இதுதான் திராவிட மாடல்.

சட்டத்தின் முன் ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் சமமானவர்கள் என்ற இலக்கை எட்டுவதில், இன்று நாட்டிலேயே நம்முடைய தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலமாக இருந்து கொண்டிருக்கிறது.

பெண்கள் பாதுகாப்பு உணர்வுடன் அச்சமின்றி வாழக்கூடிய மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அண்மையில் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, அடைக்கலம் தேடி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் அவர் வழக்கு தாக்கல் செய்தார். அந்தளவுக்குப் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த 6-ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டத்தின் 200-ஆவது ஆண்டு நிறைவு விழாவிலே நான் பங்கெடுத்தேன். பல நூறு ஆண்டுகளாக இருந்த அது போன்ற அடிமைத்தனத்தை, கொடூரத்தை துடைத்தெறியக்கூடிய சீர்திருத்தவாதிகளும், பெண்களும் கூட்டாகச் சேர்ந்து போராடியதன் விளைவுதான் இன்றைக்கு அனைத்து இடங்களிலும் பெண்கள் தலைநிமிர்ந்து நின்று கொண்டு இருக்கிறார்கள்.

“இதை நாம் எப்படியாவது மாற்றியாக வேண்டும்..” - மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

பெண்கள் முழுமையாக விடுதலை அடைந்துவிட்டார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். பல பொறுப்புகளுக்கு அவர்கள் வந்திருக்கலாம். பலரும் பொருளாதாரச் சுதந்திரத்தை அவர்கள் அடைந்திருக்கலாம். ஆனால் மனரீதியாக பெண் என்றால் ஆணுக்கு அடிமைத்தனம் என்பது ஆண்கள் மனதில் இன்னும் இருக்கிறது. இதை நாம் எப்படியாவது மாற்றியாக வேண்டும்.

“இதை நாம் எப்படியாவது மாற்றியாக வேண்டும்..” - மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !

பெண்ணுரிமைச் சிந்தனையில் ஒவ்வொரு ஆணும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தந்தை பெரியார் மிக விளக்கமாக சொல்லியிருக்கிறார். உங்கள் மகளை மனதில் வைத்து - உங்கள் சகோதரியை மனதில் வைத்து - பெண்விடுதலை குறித்து ஒவ்வொரு ஆணும் சிந்திக்க வேண்டுமென்று சொல்லி இருக்கிறார் தந்தை பெரியார். அப்படி ஆண்கள் அனைவரும் சிந்திக்கக் கூடிய காலம் உருவாக வேண்டும்.

மகளிர் நாள் என்பது பெண்கள் மட்டும் கொண்டாடுவதாக இல்லாமல் - ஆண்களும் சேர்ந்து கொண்டாடக்கூடிய காலமாக அது மாறவேண்டும். கல்வியில் - வேலைவாய்ப்பில் - தொழிலில் - சமூகத்தில் - சிந்தனையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அத்தகைய சிந்தனை மாற்றத்தை சமூகத்தில் விதைக்க இது போன்ற மகளிர் தின விழாக்கள் பயன்பட வேண்டும்" என்றார்.

banner

Related Stories

Related Stories