தமிழ்நாடு

2500 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றிய ஆருத்ரா நிறுவனம்.. 100 கோடி வாங்கிய அண்ணாமலை: புகார் சொல்லும் RSS!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ரூ.100 கோடி வாங்கியுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பு புகார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2500 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றிய ஆருத்ரா நிறுவனம்.. 100 கோடி வாங்கிய அண்ணாமலை: புகார் சொல்லும் RSS!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை பொறுப்பிற்கு வந்ததிலிருந்து, தற்போது வரை தன்னை ஒரு விவசாயி, எளிய வீட்டுப்பிள்ளை என்றெல்லாம் கதை விட்டு வருகிறார். ஆனால் அவரின் உண்மை முகம் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் விமானத்தின் எமர்ஜென்ஸி கதவைத் திறந்து மக்கள் உயிரோடு விளையாடிய அண்ணாமலையின் கேடுகெட்ட மனநிலை நாடாளுமன்றம் வரை சென்று அசிங்கப்பட்டது. 'நாங்கள் அப்படிச் செய்யவே இல்லை' என சொன்ன அண்ணாமலையின் பொய்யை அவரது கட்சியின் ஒன்றிய அமைச்சரே - நடந்தது என்ன? என்பதை நாடாளுமன்றத்திலேயே புட்டுபுட்டு வைத்துவிட்டார்.

இப்படிப் பொய் சொல்வதிலும், தில்லுமுல்லு செய்து வருவதிலும் கைதேர்ந்தவராக இருக்கும் அண்ணாமலையின் அடுத்த மோசடி புகார் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த புகாரை கூறியிருப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

2500 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றிய ஆருத்ரா நிறுவனம்.. 100 கோடி வாங்கிய அண்ணாமலை: புகார் சொல்லும் RSS!

கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்தால் மாதம்தோறும் 30% வரை வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் ரூ.2,500 கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்துள்ளது. இந்த பெரிய மோசடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மோசடியில் நிறுவனத்தின் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டு ஆருத்ரா நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள், 70 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இது தவிரத் தலைமறைவாக உள்ள உஷா, ஹரிஷ், ராஜசேகர் உட்பட மேலும் சிலரை போலிஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ஒருவராக இருப்பவர் ஹரிஷ். தலைமறைவாக இருக்கும் அவரை போலிஸார் தேடி வருகின்றனர். இப்படி மக்கள் பணத்தை ஏமாற்றி ஆட்டை போட்ட ஹரிஷுக்குதான் பா.ஜ.கவில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலப் பொறுப்பை அண்ணாமலை அண்மையில் வழங்கியுள்ளார்.

2500 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றிய ஆருத்ரா நிறுவனம்.. 100 கோடி வாங்கிய அண்ணாமலை: புகார் சொல்லும் RSS!

மேலும் இந்த மோசடி வழக்கில் இருந்து ஹரிஷை போலிஸாரிடம் பாதுகாக்கும் வகையில் அவரை டெல்லியில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக ரூ.100 கோடி அண்ணாமலை வாங்கியதாக தற்போது புகார் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த புகாரைக் கூறியுள்ளதே ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான்.

இது குறித்து அண்ணாமலையிடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கேட்டபோது, 'ஹரிஷ் பேசினால் பா.ஜ.க கட்சிக்கே ஆபத்து இருக்கு' என கூறி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வாயை தற்போதைக்கு அடைத்து வைத்துள்ளதாக பா.ஜ.க வட்டத்திற்குள் பேச்சு அடிபட்டு வருகிறது.

இந்நிலையில்தான் #100 கோடி ஆட்டையபோட்ட ஆடு என்ற ட்விட்டர் ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இதில் ஆருத்ரா நிதி நிறுவனம் அண்ணாமலைக்கு 100 கோடி வழங்கியது ஏன்?, பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கத் துணை போனாரா அண்ணாமலை? என்ற கேள்வியை இணைய வாசிகள் எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories