இந்தியா

ச்சி.. தெரு நாயிடம் கேவலமாக நடந்துகொண்ட வாலிபர்.. டெல்லியை அதிரை வைத்த சம்பவம்!

டெல்லியில் தெருநாயை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ச்சி.. தெரு நாயிடம் கேவலமாக நடந்துகொண்ட வாலிபர்.. டெல்லியை அதிரை வைத்த சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் இருந்து தினந்தோறும் வைரலாகும் வீடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபகாலமாகவே டெல்லியில் பெண்கள் கொலை செய்யப்படுவதும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், பூங்காவில் வைத்து நாயை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் ஹரி நகர் பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு வாலிபர் ஒருவர் தெருநாயை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலிஸார் இவரது புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு, 'வெட்கக்கேடான செயலை கண்டுகொள்ளாத டெல்லி போலிஸார்' என அந்த நபர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ச்சி.. தெரு நாயிடம் கேவலமாக நடந்துகொண்ட வாலிபர்.. டெல்லியை அதிரை வைத்த சம்பவம்!

மேலும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பன்குரி, "குற்றவாளிக்கு டெல்லி போலிஸ் கவசமாகச் செயல்படுகிறது. நடவடிக்கை எடுக்க எது தடுக்கிறது?" என சமூகவலைதளத்தில் பதிவிட்டு டெல்லி போலிஸ் உயர் அதிகாரிகளை டேக்செய்துள்ளார். விலங்கு ஆர்வலர்களும் போலிஸாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து 2 பிரிவுகளில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தெரு நாயை வன்கொடுமை செய்த நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories