இந்தியா

பா.ஜ.க தலைவரை நடுரோட்டில் வைத்துத் தாக்கிய பெண்கள்.. காரணம் என்ன? : வைரலாகும் வீடியோ!

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தலைவரை பெண்கள் நடுரோட்டில் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பா.ஜ.க தலைவரை நடுரோட்டில் வைத்துத் தாக்கிய பெண்கள்.. காரணம் என்ன? :  வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் இரண்டு பெண்கள் சேர்ந்து கொண்டு இரு ஆணை செருப்பால் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர், ஆண் ஒருவரின் சட்டையைப் பிடித்து சரமாரியாகத் தாக்குகிறார். மேலும் செருப்பைக் காட்டி அந்த நபரைப் பார்த்துத் திட்டுகிறார். பின்னர் சாலையில் இருந்த பைக்கை இடித்துத் தள்ளும் காட்டியும் பதிவாகியுள்ளது.

பெண்களிடம் அடிவாங்கிய அந்த நபர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பா.ஜ.க ஒரு கட்சி அல்ல. அது குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கட்சி என்றும் பா.ஜ.க தலைவர்கள் மீது குற்ற வழக்குகள் இருக்கிறது என இணைய வாசிகள் விமர்சித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த பெண்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பா.ஜ.க தலைவரை நடுரோட்டில் வைத்துத் தாக்கிய பெண்கள்.. காரணம் என்ன? :  வைரலாகும் வீடியோ!

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் அதிக அளவு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகுகிறார்கள். மேலும் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளது. அக்கட்சியில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் இருந்த வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories