தமிழ்நாடு

பாம்புதோஷம் கழிக்க ஜோதிடர் கூறிய யோசனை.. பாம்புமுன் நாக்கை நீட்டியவருக்கு இறுதியில் நேர்ந்த சோகம் !

தோஷம் கழிக்க பாம்புமுன் நாக்கை நீட்டியவரை பாம்பு கடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்புதோஷம் கழிக்க ஜோதிடர் கூறிய யோசனை.. பாம்புமுன் நாக்கை நீட்டியவருக்கு இறுதியில் நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஈரோட்டைச் சேர்ந்த 54 வயது நபர் ஒருவர் விவசாயம் செய்து வருகிறார். இவரின் மனைவிக்கு ஜோதிடத்தில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இதனால் விவசாயி தனது கனவில் அடிக்கடி பாம்பு தோன்றுவது குறித்து அவரிடம் கூறியுள்ளார்.

அதற்கு மனைவி தனக்கு தெரிந்த ஜோதிடர் ஒருவரிடம் இது குறித்து கேட்கலாம் எனக் கூறி ஜோதிடரிடம் அழைத்துச் சென்றுள்ளார். ஜோதிடரை சந்தித்த விவசாயி தனது கனவு குறித்து கூறி அதற்கு பரிகாரம் ஏதும் இருக்கிறதா எனக் கேட்டுள்ளார்.

பாம்புதோஷம் கழிக்க ஜோதிடர் கூறிய யோசனை.. பாம்புமுன் நாக்கை நீட்டியவருக்கு இறுதியில் நேர்ந்த சோகம் !

அதற்கு ஜோதிடர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் ஒன்றை கூறி அங்குள்ள சாமியார் பாம்புகளை வளர்த்து வருவது குறித்து கூறியுள்ளார். மேலும் அந்த பாம்புகளுக்கு பரிகாரம் செய்தால் நீங்கள் செய்த பாவங்கள் நீங்கும் என்றும் அதன்பின்னர் கனவில் பாம்பு வராது என்றும் கூறியுள்ளார்.

ஜோதிடரின் இந்த கருத்தை நம்பிய விவசாயி, அவர் கூறிய கோவிலுக்கு சென்று அங்குள்ள சாமியாரிடம் இது குறித்து கூறியுள்ளார். அதற்கு தன்னிடம் இருக்கும் கண்ணாடி விரியன் பாம்பை எடுத்து, பாம்பின் முன் நாக்கை நீட்டி பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

பாம்புதோஷம் கழிக்க ஜோதிடர் கூறிய யோசனை.. பாம்புமுன் நாக்கை நீட்டியவருக்கு இறுதியில் நேர்ந்த சோகம் !

அதன்படி விவசாயியும் கண்ணாடி விரியன் பாம்பின் முன்சென்று நாக்கை நீட்டியுள்ளார். அப்போது அவரை அந்த பாம்பு தீண்டியுள்ளது. இதில் அவரின் உடலில் விஷம் ஏறி அதே இடத்தில் விவசாயி மயக்கம் அடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு 4 நாள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரின் உயிரை காப்பாற்ற பாம்பு தீண்டிய அவரின் நாக்கை நீக்கியுள்ளனர். இந்த சிகிச்சைக்கு பின்னர் விவசாயி தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories