தமிழ்நாடு

5G ஏலத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழலா? திமுக IT WING கேள்விக்கு யோக்கிய சிகாமணிகளே பதில் சொல்லுங்க!

5 ஜி ஏலத்தில் கிடைத்திருப்பதோ வெறும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மட்டுமே. அப்படியென்றால் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழலா? என திமுக இணைய பிரிவு கேள்வியெழுப்பியுள்ளது.

5G ஏலத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழலா? திமுக IT WING கேள்விக்கு யோக்கிய சிகாமணிகளே பதில் சொல்லுங்க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2010ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக ஒன்றிய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் அறிக்கை வெளியிட்டார். இதை மேற்கோள்காட்டி நாட்டின் பல்வேறு ஊடகங்களும் ரூ.1.76 லட்சம் கோடி என்று அடிப்படை கூட தெரியாமல் செய்தி வெளியிட்டன.

இதைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்த போதிலும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எந்த வருவாய் இழப்பும் ஏற்பட்டதற்கு ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

5G ஏலத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழலா? திமுக IT WING கேள்விக்கு யோக்கிய சிகாமணிகளே பதில் சொல்லுங்க!

இதைத் தொடர்ந்து 2ஜி விவகாரத்தில் பொய்யான தகவல் கூறியதற்கு முன்னாள் ஒன்றிய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இதன் மூலம் சிலர் திட்டமிட்டு திமுக மேல் அவதூறு பரப்பியது வெளிப்படையாக தெரியவந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் ஒன்றிய அரசு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. இந்த ஏலம் இரு நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில், 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மட்டுமே ஏலம் சென்றது.

சுமார் 5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் போகும் என அரசு எதிர்பார்த்த நிலையில், வெறும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கே ஏலம் சென்றுள்ளது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், 14 ஆண்டுகளுக்கு முன்னர் அதுவும் 2ஜி அலைக்கற்றையில் ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு என்பதை ஊழல் என்று வர்ணித்த ஊடங்களில் ஏன் தற்போது 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகவும் குறைவான தொகைக்கு சென்றதை ஊழல் என்று கூறவில்லை என சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து திமுக இணைய பிரிவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "2008 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1 லட்சத்துக்கு 76 லட்சம் கோடி ஊழல் என்றார் சி.ஏ.ஜி.யின் வினோத் ராய். 2022இல் பாஜக ஆட்சியில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அம்பானி,அதானி,மிட்டல் கூட்டாளிகள் எடுத்த ஏலத்தில் கிடைத்திருப்பதோ வெறும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மட்டுமே. அப்படியென்றால் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழலா? அப்போது திமுக மேல் பொய்ப்பழி போட்ட பாஜக யோக்கிய சிகாமணிகளே இப்போது பதில் சொல்லுங்க." என கூறப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories