தமிழ்நாடு

சென்னை இருக்க மாமல்லபுரத்தில் போட்டி ஏன்? : வரலாற்று ஆதாரத்தோடு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சதுரங்கப்பட்டனத்துக்கு அருகில் தான் உலகப்புகழ் பெற்ற சதுரங்கப் போட்டி நடக்க இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை இருக்க மாமல்லபுரத்தில் போட்டி ஏன்? : வரலாற்று ஆதாரத்தோடு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதிவரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா இன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

இதையடுத்து 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இதற்கு முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலைவகித்து பேசினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "44 ஆவது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி என்பது சர்வதேச அளவுக்கு தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக நடந்து வருகிறது.

இப்போட்டியின் மூலமாக தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை மட்டுமல்ல - சுற்றுலா துறையும் - தொழில் துறையும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய இருக்கிறது. இன்னும் சொன்னால் தமிழ்நாட்டின் மதிப்பும் - தமிழ்நாடு அரசின் மதிப்பும் பெருமளவு இன்று முதல் உயர்கிறது.

சென்னை இருக்க மாமல்லபுரத்தில் போட்டி ஏன்? : வரலாற்று ஆதாரத்தோடு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்த உயர்வு என்பது மிகச் சாதாரணமாகக் கிடைத்து விடுவது இல்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முறையாகவும் - ஆசியா கண்டத்தில் மூன்றாவது முறையாகவும் இந்த செஸ் போட்டிகள் நடக்க இருக்கின்றன.

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த சதுரங்க விளையாட்டுத் தான் இன்று உலகம் முழுக்கவும் செஸ் என்ற பெயரால் பரவி இருக்கிறது. சில சில மாறுதல்களைச் செய்து உலகின் பல்வேறு நாடுகள் இந்த விளையாட்டை நடைமுறைப்படுத்தி வருகின்றன. தொடக்கவிழா இங்கு நடைபெற்றாலும் - போட்டிகள் முழுமையாக இயற்கை எழில் கொஞ்சும் மாமல்லபுரத்தில் நடைபெறுதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு செய்துள்ளது.

போட்டிகள் முழுமையாக இயற்கை எழில் கொஞ்சும் மாமல்லபுரத்தில் நடைபெறுதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. அதற்குப் பக்கத்தில் தான் சதுரங்கப்பட்டினம் என்ற கடலோரப் பகுதி இருக்கிறது.

சென்னைப் பட்டனத்தை மெட்ராஸ் என்று அழைத்ததைப் போல சதுரங்கப்பட்டனத்தை சத்ராஸ் என்று அழைத்தார்கள். மன்னர் காலத்தில் இருந்து புகழ்பெற்ற ஊர் அந்த ஊர். இன்றைக்கு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அந்த ஊர் கோட்டை இருக்கிறது. அத்தகைய சதுரங்கப்பட்டனத்துக்கு அருகில் தான் உலகப்புகழ் பெற்ற சதுரங்கப் போட்டி நடக்க இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories