தமிழ்நாடு

கலைநிகழ்வுகளுடன் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்.. பட்டுவேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (Photos)

சென்னையில் கலைநிகழ்வுகளுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா தொடங்கியது.

கலைநிகழ்வுகளுடன் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்.. பட்டுவேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (Photos)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதிவரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா இன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கலைநிகழ்வுகளுடன் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்.. பட்டுவேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (Photos)
கலைநிகழ்வுகளுடன் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்.. பட்டுவேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (Photos)
கலைநிகழ்வுகளுடன் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்.. பட்டுவேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (Photos)

மேலும் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், ஆசியச் சதுரங்க கூட்டமைப்பு தலைவர் எச்.எச்.ஷேக் சுல்தான் பின் கலிபா அல் நயன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் கலைநிகழ்வுகளுடன் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டுவேட்டி அணிந்து கலந்துக் கொண்டுள்ளார்.

கலைநிகழ்வுகளுடன் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்.. பட்டுவேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (Photos)
கலைநிகழ்வுகளுடன் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்.. பட்டுவேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (Photos)
கலைநிகழ்வுகளுடன் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்.. பட்டுவேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (Photos)
கலைநிகழ்வுகளுடன் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்.. பட்டுவேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (Photos)
கலைநிகழ்வுகளுடன் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்.. பட்டுவேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (Photos)

மேலும் நடிகர் ரஜினிகாந், கர்த்தி, ஐஸ்வரியா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ள 186 நாட்டு வீரர்களும், தங்கள் நாட்டுத் தேசியக் கொடிகளைக் கையில் ஏந்திக் கொண்டு கம்பீரமாக வளம் வந்தனர்.

இந்திய அணி வீரர்கள் மூவர்ணக்கொடியுடன் வந்தபோது அரங்கிலிருந்த அனைவரும் கைதட்டி அவர்களை வரவேற்றனர். அதேபோல் நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவருகிறது.

banner

Related Stories

Related Stories