தமிழ்நாடு

"Come On Baby Lets Go On The BULLET-UH".. மனைவி நகையை திருடி 'புல்லட்' வாங்கிய ஆசை கணவன்!

மனைவியின் நகையை திருடி தனக்கு ஆசையாக 'புல்லட்' பைக் வாங்கிய கணவனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

"Come On Baby Lets Go On The BULLET-UH".. மனைவி நகையை திருடி 'புல்லட்' வாங்கிய ஆசை கணவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத் (27). ஏசி மெக்கானிக் தொழில் செய்து வரும் இவருக்கு, திருமணம் ஆகி சில மாதங்களே ஆகிறது. இவரது மனைவி கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி வழக்கம்போல் வேலை முடிந்து வீடு திரும்பிய இவரது மனைவி, வீட்டிற்கு வந்து பார்க்கையில் வீட்டில் உள்ள இவரது அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சேர்னு பார்க்கையில், பீரோவில் இருந்த 17 சவரன் நகை திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

"Come On Baby Lets Go On The BULLET-UH".. மனைவி நகையை திருடி 'புல்லட்' வாங்கிய ஆசை கணவன்!

எனவே இது குறித்து எழும்பூர் காவல்நிலையத்தில் அப்துல் ரஷீத்தும், அவரது மனைவியும் புகாரளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவம் நடந்த நாளன்று, அந்த பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் எதுவுமில்லை என்பதை உறுதி செய்தனர். இதனிடையே அப்துல் ரஷீத் புதிதாக ஒரு 'புல்லட்' வாங்கியது காவல்துறையினருக்கு இவர் மீது சந்தேகம் வலுத்தது.

"Come On Baby Lets Go On The BULLET-UH".. மனைவி நகையை திருடி 'புல்லட்' வாங்கிய ஆசை கணவன்!

எனவே அவரை பிடித்து விசாரிக்கையில், மனைவி நகைகளை திருடி அதன் மூலம் கிடைத்த பணத்தில் 'புல்லட்' பைக் வாங்கியது தெரியவந்தது. மேலும் இதை இவர் தனித்து செய்யவில்லை என்றும், இவருக்கு உடனத்தையாக இரண்டு உறவினர்களும் இறந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் இவர்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணம் ஆகி வெறும் 4 மாதங்களே ஆன நிலையில், மனைவியின் நகையை திருடி கணவன் பைக் வாங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories