தமிழ்நாடு

‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தினால் கிடைத்த பலன்.. சொன்னதை செய்து காட்டிய முதல்வர் - நெகிழும் தாயார் !

உதகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தினால் விளைந்து வரும் நன்மைகள் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தினால் கிடைத்த பலன்.. சொன்னதை செய்து காட்டிய முதல்வர் - நெகிழும் தாயார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மலைகளின் அரசியாம் நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் குழந்தைகளின் மையம் தான் முத்தோரை மையம். இங்குதான் தமிழக முதல்வர் அவர்களால் மே 21 ஆம் தேதி ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் துவக்கப்பட்டது.

இந்த துவக்க முகாமில் தன் குறும்பான செயல்களால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த மழலைதான் அஜித். ஒரு வயது எட்டு மாத குழந்தையான அஜித் கடுமையான எடைக் குறைபாடு, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடன் இருந்தான்.

ஜார்க்கண்ட்டிலிருந்து புலம் பெயர்ந்து ஒரு வருடம் ஆன நிலையில் பணியாளர் செல்வி பாமா மற்றும் உதவியாளர் திருமதி தனலட்சுமி ஆகியோரின் பாசமிகு குழந்தையானான் அவனது ஊட்டச்சத்துக் குறைபாட்டினைப்போக்க பணியாளர்கள் சிறப்புக் கவனம் செலுத்தினர்.

தினசரி காலை இனிப்புணவுடன் லட்டு, கஞ்சி, கொழுக்கட்டை, ஏதாவது ஒன்றுடன், நெய், பொட்டுக்கடலை, வெல்லம், தேங்காய் சேர்த்துக் கொடுத்தல், இடையில் வேர்கடலை, கடலை மிட்டாய், பேரீச்சம் பழம் என அடிக்கடி சாப்பிட வைத்ததில் குழந்தையிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

ஊட்டச்சத்து மிக்க மதிய உணவுடன் நெய் சேர்த்துக் கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக கடுமையான மெலிவுத் தன்மை நிலையில் இருந்து, தற்போது முன்னேற்றமடைந்த நிலையை அடைந்துள்ளான் அஜித்.

களப்பணியாளர்களின் ஒருங்கிணைப்பு, சிறப்பான கவனம் ஆகிய இவை, ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளை குறுகிய காலத்தில் நல்ல நிலைக்கு முன்னேற்றுவர் என்பதில் எவ்வித அய்யப்பாடும் இல்லை.

இதுகுறித்து குழந்தையின் தாய் கூறுகையில், ‘என் குழந்தையை அங்கன்வாடி மையத்திற்கு கொண்டுசென்று நான்கு மணிவரை சிறப்பாக கவனித்துக் கொள்கின்றனர். வேலைக்குச் செல்லும் எங்களால் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியவில்லை. முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறினார்.

இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories