தமிழ்நாடு

சுதாரிப்பதற்குள் தலையில் ஏறிய வாகனம்.. துடிதுடித்து இறந்த அங்கன்வாடி ஊழியர்.. சாலை விபத்தில் கோரம்!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தின் மீது பேரு மோதியதில் அங்கன்வாடி ஊழியர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

சுதாரிப்பதற்குள் தலையில் ஏறிய வாகனம்.. துடிதுடித்து இறந்த அங்கன்வாடி ஊழியர்.. சாலை விபத்தில் கோரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி முத்திரையர்பாளையம் காந்தி திருநல்லூரை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ராஜவள்ளி (வயது 45). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ராஜவள்ளி எல்லைபிள்ளை சாவடி பகுதியில் உள்ள அங்கன்வாடியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் வேலைக்கு செல்ல வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தார்.

இந்நிலையில், ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் அருகே வந்த போது, முன்னாள் சென்ற தனியார் பேருந்தை ராஜவள்ளி முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது பேருந்து உரசியதில் ராஜவள்ளி இருசக்கர வாகனத்தோடு தடுமாறி கீழே விழுந்தார். இதில் பேருந்தின் முன்பக்க டயர் ராஜவள்ளியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜவள்ளி துடிதுடித்து இறந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு போக்குவரத்து போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பேருந்து மோதி பெண் கீழே விழும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories