தமிழ்நாடு

“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!

நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் சார்பில் “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” என்ற பிரமாண்ட நிகழ்ச்சி தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரான சேலத்தில் நடைபெற்றது.

“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சார்பில் “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” என்ற பிரமாண்ட நிகழ்ச்சியை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தத் திட்டமிட்டு, தொழில் நகரான திருப்பூர், பன்முக நகரான திருநெல்வேலியில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 3வது முறையாக நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சார்பில் “எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி, தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரான சேலத்தில் நடைபெற்றது.

கடந்த 9ஆம் தேதி சேலம் மாவட்டம் ரேடிசன் Grand Ball Room அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி - கல்லூரியில் பலரும் கலந்துகொண்டனர். மேலும், சேலத்திற்கு பல்வேறு வகையில் புகழ் தேடித்தருவோரை கவுரவிக்கும் வகையில் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!

அதன்படி, தொழில்துறையில் சிறந்து செயல்பட்டு வரும் நிறுவனங்கள் என்ற அடிப்படையில், சிறந்த தொழில் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் 'JSW STEELS' நிறுவனத்திற்கு, “எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ விருதினை சோனா கல்வி குழுமத்தின் தலைவர் வள்ளியப்பன் வழங்க, அதன் நிர்வாக இயக்குனர் பிரகாஷ் ராவ் பெற்றுக்கொண்டார்.

“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!

அதேபோல், சிறந்த வணிக குழுமமான 'ARRS' நிறுனத்தின் தலைவர் ரவிச்சந்திரனுக்கு “எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ விருதினை சேலம் மாநகராட்சியின் மேயர் ராமச்சந்திரன் வழங்கி கவுரவித்தார்.

“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!

மேலும் மற்றுமொரு சிறந்த ஏற்றுமதி நிறுவனமான 'ALC textiles' நிறுவனத்திற்கு, “எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ விருதினை சேலம் மாவட்ட காவல் துணைக்காணிப்பாளர் மாடசாமி வழங்க 'ALC TEXTILES' நிறுவனத்தின் மேலான் இயக்குனர் அழகரசன் பெற்றுக்கொண்டார்.

“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!

மேலும், சிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ’THE SALEM AERO PARK' நிர்வாகத்திற்கு, “எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ வழங்கப்பட்டது. இந்த விருதினை தமிழக அரசின் தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் வழங்க ’THE SALEM AERO PARK' நிர்வாக இயக்குனர் சுந்தரம் ராமசாமி பெற்றுக்கொண்டார்.

“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!

அதேபோல், சிறந்த போக்குவரத்து நிறுவனமாக செயல்பட்டு வரும் ‘கே.பி.என்’ நிறுவத்தினருக்கு எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ விருது வழங்கப்பட்டது. அந்த விருதினை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் வழங்க ‘கே.பி.என்’ நிறுவனத்தின் தலைவர் கே.பி. நடராஜன் பெற்றுக்கொண்டார்.

“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!

மேலும் சேலத்தின் சிறந்த தொழிலதிபராக விளங்கி வரும் ‘RADDISON' ராமலிங்கம் அவர்களுக்கு தொழிலதிபர் அனில் விருது வழங்கி கவுரவித்தனர்.

“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!

தொழில்துறை மட்டுமல்லாது சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்த இளைஞர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த நிறுவனங்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

குறிப்பாக, சிறந்த சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி மையமான ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’க்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறுஸ்து ராஜ் IAS வழங்கி கவுரவிக்க, சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் வைஷ்னவி சங்கர் பெற்றுக்கொண்டார்.

“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!

அதேபோல் சமூக சேவகர்கள் ‘இளைஞர்கள் குழு’வுக்கு கட்டிட பொறியாளர் முகேஷ், தரன் Cancer Speciallity மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் உதய்சரன் விருது வழங்கி கவுரவித்தார்.

“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை பவித்ராவுக்கு குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ரேஷ்மா விருது வழங்கி கவுரவித்தார்.

“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!

மருத்துவத்துறையில் சிறப்பாகச் செயலாற்றி வரும், மருத்துவத்துறை சார்ந்த சிறந்த தொழில்நுட்ப கல்லூரியான ‘SCHOOL OF ALLIED HEALTH SCIENCES' கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதினை Emearald Valley, Golden Gates ஆகிய பள்ளிகளின் தாளாளர் மீனா சேது வழங்க கல்லூரியின் தலைவர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.

“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!

மேலும் சிறந்த கல்வி ஆலோசராக பலருக்கும் வழிகாட்டி வரும் கல்வி ஆலோசகர் ஜெயப்பிராகஷ் காந்தி அவர்களுக்கு அரசு குற்றவியல் வழக்கறிஞர் தம்பிதுரை விருது வழங்கி கவுரவித்தார்.

“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!

அதேபோல் இயற்கை விவசாய மேற்கொள்ள ஆலோசனை வழங்கி விவசாயத்தை செலுமைப்படுத்தி வரும் இயற்கை விவசாய ஆலோசகர் ‘ஆரண்யா அல்லி’ அவர்களுக்கு சமூக ஆர்வலர் லதா சேகர் மற்றும் சேலம் மாநகராட்சியின் துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர்.

“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!
“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!
“சேலத்திற்கு பெருமை சேர்த்தவர்களை கொண்டாடிய கலைஞர் செய்திகள்” : “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” விருது விழா!
banner

Related Stories

Related Stories