தமிழ்நாடு

திருப்பூரில் “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” - கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் மாபெரும் விருது விழா!

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சார்பில் திருப்பூரில் எங்கள் ஊர் எங்கள் பெருமை விருது விழா நாளை மாலை நடக்கிறது.

திருப்பூரில் “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” - கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் மாபெரும்  விருது விழா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” என்ற பிரமாண்ட நிகழ்ச்சியை தமிழகத்தின் முக்கிய நகரங்களிலெல்லாம் நடத்த திட்டமிட்டுள்ளது.

முதல் நிகழ்ச்சி, தொழில் நகரமான திருப்பூரில் நடைபெறுகிறது. இன்று (டிச.27) ஐ.கே.எப்.ஏ (IKFA) அரங்கில் மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.

இதில் பாப்பீஸ் நிறுவனத் தலைவர் சக்திவேல், திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், கிளாஸிக் போலோ இயக்குநர் சிவராம், எழுத்தாளர் சுப்ரமணியன் பாரதி, சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர் கார்த்திகேய சிவசேனாதிபதி உள்ளிட்ட திருப்பூரின் முன்னோடிகள் உரையாற்றுகின்றனர்.

மேலும், திருப்பூருக்கு பல்வேறு வகையில் புகழ் தேடித்தருவோரை கவுரவிக்கும் வகையில், தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர், “வனத்திற்குள் திருப்பூர்” என்ற சூழலியல் அமைப்பு, லக்ஸ் பின்னலாடை நிறுவன இயக்குநர் ராகுல் டோடி, முண்டாசுப்பட்டி-ராட்சசன் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் ராம்குமார், தடகள வீரர் தருண் அய்யாசாமி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

திருப்பூரில் “எங்கள் ஊர்; எங்கள் பெருமை” - கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் மாபெரும்  விருது விழா!

இந்த நிகழ்ச்சியில் திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி-மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. அனைவருக்கும் அனுமதி இலவசம்.

திருப்பூர் மக்களே வாருங்கள், நம்ம திருப்பூரைக் கொண்டாடுவோம்!

banner

Related Stories

Related Stories