தமிழ்நாடு

வீட்டிற்கு அழைத்து வடமாநில பெண் பாலியல் வன்கொடுமை.. பீகார் இளைஞர்கள் 3 பேர் கைது - போலிஸ் அதிரடி !

வடமாநில பெண் தொழிலாளியை பாலியல் வன்புணர்வு செய்த மூன்று இளைஞர்களை போலிஸார் கைது செய்தனர்.

வீட்டிற்கு அழைத்து வடமாநில பெண் பாலியல் வன்கொடுமை.. பீகார் இளைஞர்கள் 3 பேர் கைது - போலிஸ் அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு பால்ராஜ் வரவழைத்து நெருக்கமாக இருந்துள்ளார். பின்னர் தனது நண்பர்களான பிரதீப் குமார், மனோஜ் குமார் ஆகிய இருவரையும் வீட்டிற்கு வரவழைத்து மூன்று பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அப்போது அந்தப் பெண் மயங்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிறகு மயக்கம் தெளிந்து அந்தப் பெண் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பால்ராஜ், பிரதீப் குமார், மனோஜ் குமார் ஆகிய மூன்று இளைஞர்களை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories