தமிழ்நாடு

“நமது முதல்வர், நமது பெருமை” : NO.1 முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என ‘தினகரன்’ நாளேடு புகழாரம்!

நாடு முழுவதுமே நமது முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை உற்று நோக்குகிறது என்றுதானே அர்த்தம். நமது முதல்வர், நிச்சயம் நமது பெருமை.

“நமது முதல்வர், நமது பெருமை” : NO.1 முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என ‘தினகரன்’ நாளேடு புகழாரம்!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நம்பர் 1 முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதில் பெருமை இல்லை. நம்பர் 1 மாநிலம் தமிழகம் என்பதில் தான் எனக்கு பெருமை என்று உறுதி ஏற்று இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் ஆக்கப்பூர்வமான முறையில் அமைச்சர்கள், அதிகாரிகள் துணையுடன் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியதால் இப்போது நாட்டிலேயே நம்பர் 1 முதல்வராக இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தி.மு.க கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள், அதை நிறைவேற்றும் வேகம், மக்கள் நலப்பணிகளில் காட்டும் ஆர்வம் குறிப்பாக வெள்ள நிவாரண பணிகளில் வெள்ளம் பாதித்த இடங்கள் அத்தனையும் அவரே நேராக சென்று மேற்கொண்ட ஆய்வு என அனைத்தையும் பார்க்கும் போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு அங்கு தெரிகிறது. துயர் துடைக்க ஓடோடி வரும் முன்மாதிரி முதல்வர் என்பதை கடைக்கோடி கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கூட இந்த வெள்ள பாதிப்பில் உணர்ந்து கொண்டனர். மக்களின் வலியை துடைக்க தேடி, ஓடிச்சென்று அத்தனை பேருக்கும் ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார்.

மே 7ம் தேதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கூறி முதல்வர் பதவி ஏற்ற போது தமிழ்நாடு வளம் மிக்கதாக இல்லை. ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் கடன். அதைவிட கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. அதிதீவிரமாக செயல்பட்டு அதை கட்டுக்குள் கொண்டு வந்த போது தமிழகம் முழுவதும் பெருவெள்ளத்தால் மக்கள் தத்தளித்து போனாார்கள். கடந்த 3 வாரங்களாகவே வெள்ள நிவாரண பணிகளை முடுக்கி விட்டு கொண்டு இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது தொழிற்துறையையும் முடுக்கி விடும் முனைப்பில் தீவிரம் காட்டத்தொடங்கி இருக்கிறார். 2 நாட்களாக கோவையில் சுற்றுப்பயணம் செய்து வரும் அவர் பல்வேறு நலத்திட்டங்களை, வளர்ச்சிப்பணிகளை தொடங்கி வைத்ததுடன் 92 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களை தொடங்கி வைத்து இருக்கிறார்.

கோவை மாவட்டத்தில், 10 சட்டமன்ற தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் வென்றாலும் கோவை விமானநிலையத்தில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்ல 3 மணி நேரம் ஆகிவிட்டது. வீதிதோறும் திரண்ட மக்கள் வெள்ளம் கடந்த 6 மாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது கொண்ட நம்பிக்கையை காட்டி இருக்கிறது. அவர் ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல ஓட்டு போடாதவர்களுக்கும், ஏன் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் தான் முதல்வர் என்பதை தன் ஒவ்வொரு செயலாலும் நிரூபித்து கொண்டு வருகிறார்.

முதலில் குஜராத் மாடல் என்றார்கள், இப்போது டெல்லி மாடல் என்று சொல்கிறார்கள். அந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூட தி.மு.கவை பின்பற்றி 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் தலா ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை பஞ்சாப் மாநிலத்தில் அறிவித்து இருக்கிறார் என்றால் நாடு முழுவதுமே நமது முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை உற்று நோக்குகிறது என்றுதானே அர்த்தம். நமது முதல்வர், நிச்சயம் நமது பெருமை.

banner

Related Stories

Related Stories