தமிழ்நாடு

பெண்ணை நிர்வாணப்படுத்தி டான்ஸ் ஆடச்சொல்லி மிரட்டிய பெண் காவல் ஆய்வாளர்... இந்தக் கொடுமை எங்கு தெரியுமா?

விசாரணைக்கு அழைத்து வந்த பெண்ணை பெண் காவல் ஆய்வாளரே நிர்வாணமாக்கி சக காவலர்களின் முன்னிலையில் நடனம் ஆட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணை நிர்வாணப்படுத்தி டான்ஸ் ஆடச்சொல்லி மிரட்டிய பெண் காவல் ஆய்வாளர்... இந்தக் கொடுமை எங்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விசாரணைக்கு அழைத்து வந்த பெண்ணை பெண் காவல் ஆய்வாளரே நிர்வாணமாக்கி சக காவலர்களின் முன்னிலையில் நடனம் ஆட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு காவல் நிலையத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குழந்தை கொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஒரு பெண்ணை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். விசாரணைக்கு வந்த அப்பெண்ணிடம் காவல் ஆய்வாளார் ஷபானா இர்ஷத், உடையைக் கழற்ற சொல்லி நிர்வாணப்படுத்தியுள்ளார்.

மேலும், நிர்வாணமாக நடனம் ஆட வைத்து அந்தப் பெண்ணை காவல் நிலையத்திலேயே வைத்து அவமானப்படுத்தியுள்ளார். மேலும் அங்கிருந்தவர்களிடம் இக்காட்சியை வீடியோவாகவும் எடுக்கச் சொல்லியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை மேலிடத்திற்கு புகார் சென்றது. போலிஸ் துறைக்கே களங்கம் ஏற்படுத்திய பெண் காவல் ஆய்வாளரை உடனடியாக பணி நீக்கம் செய்த காவல்துறை, மேற்கொண்டு நிரந்தரமாக காவல் பணியை தொடர முடியாதளவிற்கு கட்டாய ஓய்வு உத்தரவு பிறப்பித்தது.

பாதுகாப்பு தரவேண்டிய போலிஸாரே பெண் என்றும் பாராமல் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டது பாகிஸ்தானில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

- உதயா

banner

Related Stories

Related Stories