தமிழ்நாடு

அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்.. தேர்தல் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த தேர்தல் அலுவலர் : நடந்தது என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் துணை தலைவர் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அலுவலர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்.. தேர்தல் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த தேர்தல் அலுவலர் : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தாங்கி ஊராட்சியில் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 6 வார்டு உறுப்பினர்கள் ஒரு அறையில் ரகசிய வாக்கெடுப்பு செய்யும் போது தலைவர் தேர்தலில் நின்ற அதிமுகவை சேர்ந்த பிரபாகரன் என்பவர் தோல்வியுற்றார்.

அப்போது துணை தலைவருக்காக அ.தி.மு.கவை சேர்ந்த ஒருவருக்கு வாக்களிக்குமாறு ரகசிய அறையின் ஜன்னல் பகுதியில் இருந்து குரல் கொடுக்கவே அவற்றை தேர்தலில் அலுவலரான ஹரி தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஹரிக்கு ரத்தக்கொதிப்பு அதிகமாகியுள்ளதால். அதனால் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றன. பின்னர் அவரை மீட்டு முதல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட போது வழியிலேயே உயிர் பிரிந்தது.

இவை முழுக்க முழுக்க ரகசிய வாக்கெடுப்பின்போது அ.தி.மு.கவை சேர்ந்த ஒருவரால் ஏற்பட்ட வாக்குவாதம் தேர்தல் அலுவலரின் மன உளைச்சலுக்கு காரணமாக அமைந்ததால் உயிர் பிரிந்ததாக அங்கு கூடி உள்ள பொதுமக்கள் அனைவரும் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories