தமிழ்நாடு

காதலனின் மனைவி புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட இளம் பெண் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இளம் பெண்ணின் படத்தை மார்பிங் செய்து இணையத்தில் நிர்வாணமாகப் பதிவிட்ட வழக்கில் 2 பேரை போலிஸார் கைது செய்தனர்.

காதலனின் மனைவி புகைப்படத்தை மார்பிங் செய்து  வெளியிட்ட இளம் பெண் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் புகைப்படம் ஒன்று மார்பிங் செய்து நிர்வாணமாக சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து அந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அந்த பெண்ணும், அரவது பெற்றோரும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த வழக்கு குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது மிபின் ஜோசப் என்ற இளைஞர்தான் இளம் பெண்ணின் நிர்வாணப்படத்தை இணையத்தில் வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, சௌமியா என்ற பெண் கூறியதால்தான் நான் இப்படி செய்தேன் என போலிஸாரிடம் மிபின் ஜோசப் வாக்குமூலம் அளித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் சௌமியாவை பிடித்து விசாரித்தனர்.

காதலனின் மனைவி புகைப்படத்தை மார்பிங் செய்து  வெளியிட்ட இளம் பெண் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

அப்போது, அந்த இளம் பெண்ணின் கணவர் சௌமியாவின் முன்னாள் காதலர் என்றும், இவர் சௌமியாவிடம் பணம் வாங்கி திருப்பித் தர ஆத்திரத்தில், பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இருவரையும் பிரித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மார்பிங் செய்து அந்த பெண்ணிடம் படத்தை சமூகவலைதளங்களில் பதிவேற்றியது தெரியவந்தது.இதையடுத்து போலிஸார் சௌமியா மற்றும் மிபின் ஜோசப் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories