தமிழ்நாடு

"நான் இருக்கேன்.. எதுக்கும் கவலைப்படாதீங்க” : சிறுமியை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவி கோரிய சேலம் சிறுமியை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

"நான் இருக்கேன்.. எதுக்கும் கவலைப்படாதீங்க” : சிறுமியை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவி கோரிய சேலம் சிறுமியை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சேலத்தைச் சேர்ந்த ராஜநந்தினி என்பவருக்கு 14 வயதில் ஜனனி என்ற மகள் உள்ளார். இச்சிறுமி சிலம்பம், வில்வித்தை, ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டுகளில் மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு சிறுநீரக செயலிழப்பு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜனனி. ஜனனிக்கு அவசரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டிய சூழல் காரணமாக அவரது தாய் நந்தினி தன்னுடைய சிறுநீரகத்தை கொடுத்தார்.

அறுவை சிகிச்சை முடிந்து சில வாரங்களிலேயே அவருக்கு பொருத்தப்பட்ட சிறுநீரகம் வேலை செய்யவில்லை என தெரிவிக்கவே அதிர்ந்துபோயினர். தன் கணவரும் கைவிட்டதால் பெண் குழந்தையோடு பரிதவிக்கும் நிலைக்கு ஆளானார் ராஜநந்தினி.

2019ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்துள்ளார். இதற்கு சாதகமான பதில் கிடைத்தது.

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சிந்தனைக்களம்’ நிகழ்ச்சியில் ராஜநந்தினி பேசிய வீடியோவும் ஒளிப்பரப்பானது. இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராஜநந்தினியை தொடர்புகொண்டு பேசி தேவையான உதவிகளைச் செய்ய நடவடிக்கை எடுத்தார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்து, தடையற்ற மருத்துவ சிகிச்சைக்கான நடவடிக்கைகள் தி.மு.க அரசால் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே நேற்று சிறுமி ஜனனியின் தாயாரை செல்போனில் அழைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சரிடமும் கலெக்டரிடமும் பேசியுள்ளேன். விரைவில் சிகிச்சை அளிக்கப்படும். பயப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் வார்த்தை கூறினார்.

இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமி ஜனனியை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சிறுமி ஜனனி மற்றும் அவரது தாயாரை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதற்கும் கவலைப்படாமல் தைரியமாக இருக்குமாறும், சிறப்பான சிகிச்சை கிடைக்கும் என்றும் நாங்கள் இருக்கிறோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் அரசு தங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளாத நிலையில், தற்போது முதலமைச்சரே நேரில் வந்து நலம் விசாரித்ததால் சிறுமியும் தாயும் நெகிழ்ந்துபோய் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories