
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ – கழக மகளிரணியின் மேற்கு மண்டல மாநாடு 1.50 லட்சம் மகளிரின் வருகையுடன் எழுச்சியோடு நடந்து முடிந்துள்ளது.
இம்மாநாட்டிற்கு தலைமையேற்று கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி பேசியது பின்வருமாறு,
“திருப்பூரில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டினை மிகச்சிறப்பாக நடத்தி காட்டியிருக்கும் கழகத்தில் மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு மகளிரணி சார்பில் மிகப்பெரிய நன்றி.
பெண்களுக்கான ஓர் ஆட்சியை, பெண்களின் எதிர்காலத்தை பெருமைப்படுத்தக்கூடிய ஓர் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி செலுத்தக்கூடிய மாநாடுதான், இந்த ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ - மேற்கு மண்டல மகளிர் மாநாடு.

தமிழ்நாட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்க வேண்டிய கடமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் உள்ளது. பாசிசத்திற்கு எதிராக எழும் அத்தனை குரல்களும் முதலமைச்சருக்கு பின்னால்தான் அணிதிரண்டு கொண்டிருக்கிறது.
இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், உழைக்கும் பெண்கள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. காரணம், அடிப்படை கல்வி முதல் அனைத்து வாய்ப்புகளும் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் தமிழ்நாடுதான் விளங்குகிறது. இதனை உறுதி செய்த ஆட்சி திராவிட இயக்கத்தின் ஆட்சி.

தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கி உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 56% பெண்களால் தொடங்கப்பட்டது. பெண்களின் எதிர்காலத்தைப் பெருமைப்படுத்தக் கூடிய ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார்.
அப்படியான தமிழ்நாட்டில் காழ்ப்புணர்ச்சியை உருவாக்கி கலவரத்தை செய்து வென்றுவிடலாம் என்று நினைக்கும் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணிக்கு நிச்சயம் சம்மட்டி அடி கொடுப்போம்!”






