தமிழ்நாடு

தோல்வி பயத்தில் திமுக வேட்பாளரை கொலை செய்ய முயற்சி: தடுக்க முயன்ற 4 பேர் படுகாயம் - அதிமுகவினர் அராஜகம்!

கூடலூர் தி.மு.க வேட்பாளர் காசிலிங்கத்தை தோல்வி பயம் காரணமாக கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோல்வி பயத்தில் திமுக வேட்பாளரை கொலை செய்ய முயற்சி: தடுக்க முயன்ற 4 பேர் படுகாயம் - அதிமுகவினர் அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கூடலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் காசிலிங்கம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் முழு ஆதரவை தி.மு.க வேட்பாளர் காசிலிங்கத்திற்கு வழங்கி வருகின்றனர்.

பத்தாண்டு அ.தி.மு.க ஆட்சியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராத நிலையில் சம்பள உயர்வும் 10 ஆண்டு ஜெயலலிதா மற்றும் எடப்பாடி ஆட்சியில் வழங்கப்படாத நிலையில் தி.மு.க ஆட்சியால் மட்டுமே தோட்டத் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்பதால் அ.தி.மு.க மற்றும் பிற கட்சியை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் தி.மு.கவில் இணைந்து வருகின்றனர்.

தோல்வி பயத்தில் திமுக வேட்பாளரை கொலை செய்ய முயற்சி: தடுக்க முயன்ற 4 பேர் படுகாயம் - அதிமுகவினர் அராஜகம்!

இதை பொருத்து கொள்ளமுடியாத அ.தி.மு.க மாநில வர்த்தகர் அணி செயலாளர் சஜீவன் நேற்று இரவு அ.தி.மு.க கூலிப்படையை வைத்து கூடலூர் தி.மு.க வேட்பாளரை அரிவாளால் வெட்ட முயற்சி மேற்கொண்டார்.

அப்போது தி.மு.க வேட்பாளர் காசிலிங்கத்தை பாதுகாக்க முயன்ற 5 பேர் மீது சரமாரியாக வெட்டு விழுந்ததில், நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக அ.தி.மு.கவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலை செய்ய தூண்டுதலாக இருந்த அ.தி.மு.கவை சேர்ந்த பலரை போலிஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க வேட்பாளர் காசி லிங்கத்திற்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கோடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர வியாபாரி சஜீவன் தோல்வி பயம் காரணமாக தி.மு.க வேட்பாளரை கொலை செய்ய முயன்றது கூடலூரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories