தி.மு.க

“சின்ன ஒலிப்பெருக்கி, திமுக பாடல்கள், அதிமுக அவலங்கள்” -தள்ளாத வயதிலும் தினசரி பிரசாரம் செய்யும் முதியவர்

சென்னை மேடவாக்கத்தில் தி.மு.கவுக்கு ஆதரவாக பாடல்களை ஒலித்தபடியே சைக்கிளில் சென்று பிரசாரம் செய்து வருகிறார் முதியவர் ஒருவர்.

“சின்ன ஒலிப்பெருக்கி, திமுக பாடல்கள், அதிமுக அவலங்கள்” -தள்ளாத வயதிலும் தினசரி பிரசாரம் செய்யும் முதியவர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தள்ளாத வயது முதியவர் அவர், தமிழகத்தின் எதிர்காலம் சிறக்க தி.மு.கழகம்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தினந்தோறும் சைக்கிளில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்து கழக வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர பணியாற்றிவருகிறார்!

விக்னேஷ் கிருஷ்ணன் என்பவர் அந்தப் பெரியவரைச் சந்தித்து பேசினார். அப்போது விக்னேஷ் கிருஷ்ணனுக்கும், முதியவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியானதன் உரையாடல் விவரம்:-

விக்னேஷ் கிருஷ்ணன்:- தாத்தா, எத்தனை வருஷமா தி.மு.க.வில் இருக்கீங்க?

முதியவர்:- 40 வருஷமா இருக்கேன்!

விக்னேஷ் கிருஷ்ணன்:- நானும் தி.மு.க.தான், தாத்தா. தனியா நீங்க மட்டும் பிரச்சாரத்திற்கு போறீங்களா?

முதியவர்:- எப்போதும் தனியே பிரச்சாரத்திற்கு காலையிலேயே கிளம்புவேன். ஒவ்வொரு தெருவுக்கும் பிரச்சாரம் செல்வேன். நான் பிரச்சாரம் செய்துக்கிட்டே இருக்கேன். இவ்வளவு வயசானாலும் நான் ஆரோக்கியமாதான் இருக்கேன்!

விக்னேஷ் கிருஷ்ணன்:- இந்த முறை தி.மு.க. ஜெயிச்சுடுமா?

முதியவர்:- கண்டிப்பா ஜெயிச்சுடுவோம்! நான் போகுமிடமெல்லாம் மக்கள் மத்தியில் வரவேற்பு நல்லா இருக்கு!

விக்னேஷ் கிருஷ்ணன்:- நிச்சயம் ஜெயிச்சிடுவோம்! உங்களைப்போன்றவர்கள் உயிர்ப்புடன் இருக்கும் போது தி.மு.க.வுக்கு தோல்வியே கிடையாது. வெற்றிதான்.

இவ்வாறு விக்னேஷ் கிருஷ்ணன் முதியவருடன் நடைபெற்ற தனது உரையாடலை தனது ஃபேஸ்புக்கில் அப்படியே பதிவு செய்து அதன் வீடியோவையும் வெளியிட்டு இருப்பதுடன் அச்சந்திப்பு குறித்து அவர் பதிவிட்டிருந்த விவரம் பின்வருமாறு:-

“சற்றுநேரம் முன்பு மேடவாக்கம் அருகே ஒரு வேலையாக சென்று கொண்டிருந்தபோது இந்த பெரியவரை பார்க்க நேர்ந்தது. பார்த்ததும் ஏற்பட்ட நெகிழ்ச்சியை நிச்சயம் வார்த்தையால் சொல்லிவிட முடியாது. அருகில் சென்று பேச்சு கொடுத்தேன். 40 வருடமாக கட்சியில் இருக்கிறாராம். கூட்டமாக பிரச்சாரம் செய்யும்போது உடன் செல்வாராம். மற்ற நாட்களில் தனியாக சைக்கிளை எடுத்துக்கொண்டு தெரு தெருவாக பிரச்சாரத்துக்கு செல்வாராம்.

சைக்கிளில் கலைஞர் , அண்ணா, மு.க.ஸ்டாலின் புகைப்படம். ஒரு சின்ன ஒலிப்பெருக்கி அதில் தி.மு.க பாடல்கள் , அ.தி.மு.க அவலங்கள் ஒலித்துக்கொண்டு இருந்தது. ஒரு 15 நிமிடம் பேசினேன். வாழ்க்கையில் மறக்க முடியாத நிமிடங்களில் இதுவும் ஒன்று. கொஞ்ச நேரம் வீடியோ எடுத்து விட்டு பின்பு தொடர்ந்து பேச்சு கொடுத்தேன். நிச்சயம் ஜெயிப்போம் என்று அவர் சொன்னபோது அந்த முகத்தில் அப்படி ஒரு நம்பிக்கை அப்படி ஒரு மகிழ்ச்சி.

வாங்க மறுத்தவரிடம் பிரச்சார செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என கையில் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு நேரத்திற்கு சாப்பிடுங்க , உடம்ப நல்லா பாத்துக்கோங்க உங்களை மாதிரி ஆட்களால்தான் தி.மு.க இன்னும் இருக்குனு சொல்லிவிட்டு விடைப்பெற்றேன். அ.தி.மு.க அவலங்களை ஒலித்தபடி அந்த பெரியவர் சைக்கிள் தன் பிரச்சாரத்தை தொடர ஆரம்பித்தது.

திராவிடம் வெல்லும் 🖤❤️ ” இவ்வாறு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories